பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

அங்ஙனமே இந்த எம்பெருமானும் ஆன்மாவின் இயல்பு, ஈசுவரனது இயல்பு, ஆன்மா அடையும் பயன், அப்பயனை அடைதற்கு உபாயம், அப்பயனை அடைதற்குப் பகையாய் உள்ளவைகள் ஆகிய ‘அர்த்த பஞ்சகத்தையும் தனக்கு விளங்கச்செய்வான் என்பது இப்பெருமானின் பெயர் குறிக் கின்றது. இங்ஙனம் சிந்தித்த நிலையில் திவ்விய கவியின் பாசுரம் நினைவிற்கு வருகின்றது.

“ஆட்பட்டேன், ஐம்பொறியால் ஆசைப்பட் டேன்; அறிவும் கோட்பட்டு நாணும் குறைபட்டேன்-சேண்பட்ட வண்காவை வண்துவரை வைத்த விளக்கொளிக்குத் தண்காவைச் சேர்ந்தான் தனக்கு”

(ஆள்பட்டேன்-அடிமைப் பட்டேன்; கோள்பட்டு-கவரப்பெற்று; நானும் - நாணமும்; குறை பட்டேன். குறைந்துவிடப் பெற்றேன்; சேண்பட்ட - தொலைவிலுள்ள (தேவலோகத்திலுள்ள); வள் கா-வளப்பமுள்ள சோலை போல் தழைத்த பாரிசாத மரத்தை; வண்துவரை-வளப்பமான துவாரகை)

என்ற திருப்பாசுரத்தையும் ஒதுகின்றோம். இதுவும் அகப் பொருள் துறையில் அமைந்த பாடலாகும். தலைவனைப் பிரிந்து ஆற்றாளாகிய தலைவி அவன்மாட்டுத் தனக்குள்ள அன்புறுதியைத் தோழிக்குக் கூறுவதாக அமைந்த பாடல் இது. தோழிமூலம் செவிலிக்கும், அவள் மூலம் நற்றாய்க்கும், அவள் மூலம் தந்தைக்கும் ஏனைய பெரியோர்க்கும் தெரிவித்து விரைவில் தன்னை அவனுக்கு மணம் செய்து வைக்குமாறு செய்து கொள்ள விரும்புவதே இதன் நோக்கமாகும். நெஞ் சென்னும் உட்கண்ணால் எம்பெருமானைச் சேவித்த திவ்விய கவி அவன் பக்கல் தமக்குண்டான கழிபெருங் காதலைத் தமக்குப் புருஷகாரராக நிற்கும் ஆசாரியனிடத்து உரைக்க வேண்டி, தம்மோடொத்த ஞானிகளாக நண்பர்க்கு எடுத்துரைத்தல் இதன் உள்ளுறைப் பொருளாகும். ‘உண்ணும்சோறு பருகு நீர்தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’ என்றபடி எல்லாம் அவனேயாம்படிக் கிளர்ந்தெழும் கவிஞரின் உணர்வும் நம்மையும் வந்து பற்றுவதை உணர்கின்றோம்.

நான்முகன் நாராயணனை நோக்கி வேள்வி செய்த இடம் காஞ்சி என்ற புராண வரலாற்றை அறிவோம் அன்றோ?

36. நூற். திருப். அந் - 77. 37. திருவாய்.