பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தொண்டைநாட்டுத்திருப்பதிகள்

அவர்களிடம் அவர் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற செய்தியை அறிவித்தவுடன் அவருடைய உயிர் திருமேனியி லிருந்து பிரிந்தது என்றும், அதன் பின்னர் அவர்கள் பெரியுவடை யாரின் திருமேனியை ஒரு குழியிலிட்டுத் தகனம் செய்து ஈமக்கடன்களை முறைப்படி செய்தனர் என்றும் இராமாயணத் தால் நாம் அறிவோம். சடாயுவைத் தகனம் செய்த கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாதல் பற்றி இத்தலம் ‘திருப்புட்குழி’ என்ற பெயர் பெற்றது என்பர்.

திருமங்கையாழ்வார் ஒருவர் மட்டிலுமே இந்த எம்பெரு மானை மங்களாசாசனம் செய்துள்ளார். திருவிட எந்தை எம்பெரு மானைத் தாய்ப்பாசுரமாக மங்களாசாசனம் செய்யும் பொழுது ‘புலங்கெழு பொரு நீர் புட்குழி பாடும்’ என்று குறிப்பிடு கின்றார். ‘என்மகள் திருப்புட்குழி என்னும் திருப்பதியின் நீர் வளங்களைப்பற்றிப்பாட்டுகள் பாடாநின்றாள்’ என்று பராங்குச நாயகியின் நிலையைக் குறிப்பிடுகின்றாள் அவளுடைய திருத்தாயார்.’ பெரிய திருமடலில் ஆழ்வார் இத்தலத்து எம்பெரு மானைப் புட்குழி எம்போரேற்றை’ என்று குறிப்பிடுகின்றார். இத்தலத்தில் கிழக்கே திருமுகமண்டலங் கொண்டு வீற்றிருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் விஜயராகவப் பெருமானையும், அவரது இடப்பக்கத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சிதரும் மரகதவல்லி நாச்சியாரையும் நாம் வணங்குகின்றோம். இந்த இருவருடைய திவ்விய மங்கள விக்கிரகங்களும் மிக அற்புத மானவை; கண்டோரைப் புளகாங்கிதம் செய்ய வல்லவை.

இந்த எம்பெருமானைச் சேவித்த நிலையில் திவ்விய கவியின் பாடலும் நினைவுக்கு வருகின்றது.

“மால்வேழ மும்,அரவும், மாயையும்வெற் பும்,கடலும், மேல்வீழ் படையும் விடமும்போய்ப்-பாலன் நெருப்புஉள் குழிகுளிர நின்றதும்கேட்(டு) ஒதார் திருப்புட் குழிஅமலன் சீர்.”

41. புள்-சடாயு. 42. பெரி. திரு . 2.7:8 43. பராங்குச நாயகியின் நிலையை 12-ஆவது கட்டுரையில் காண்க. 44. பெரிய திருமடல்-கண்ணி 117. போரில் காளை போன்றவன்.108)

45. நூற். திருப். அந்-88