பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ‘தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என் அனும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறைபற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணுாறு தொள்ளாயிரம் என்பவற்றிற்கும் அ ப் பொ. ரு ள் ஏற்கவேண்டும். அங்ங்னம் ஏலாமையின் அது போலியுரையென மறுக்க-என்று பாவாணர் கூறி யிருப்பது பொருந்தாது. ஒன்பது என்னும் சொல் லுக்கு ஒன்று குறைந்த பத்து' என்று பொருள் கூறு வதே பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. இலத்தீனில் W-க்கு (ஐந்திற்கு) முன்னல் 1 (ஒன்று) போட்டால் IV (4) என, அதாவது நான்கு என்றும், X-க்கு (பத்துக்கு) முன்ல்ை 1 (ஒன்று) போட்டால் IX(9) என, அதாவது ஒன்பது என்றும் பொருள்படுவதையும், பத்தொன்பது என் பது ஒன்று குறைந்த இருபது (undeviginti) எனவும் பதினெட்டு என்பது இரண்டு குறைந்த இருபது (duodeviginti) எனவும் சொல்லப்படுவதையும் ஈண்டு ஒப்பிட்டு நோக்கவேண்டும். இலத்தீனில் அப்படியிருப்பதனால் தமிழிலும் ஒன்பது என்பது ஒன்று குறைந்த பத்து என்றே பொருள்படும் என்று கூறவேண்டிய கட்டாயம் இல்லை யெனினும், 'ஒன்று குறைந்த எண்' எனக் கூறும் மரபு, உலக மக்களிடையே உண்டு என்பதைச் சுட்டி கினை வுறுத்தவே இங்கே இலத்தீன் எண்ணுப் பெயர்கள் எடுத்துக் காட்டப்பட்டன. இந்தப் பாதையைப் பின்பற்றில்ை, ஒன்பது என்னும் சொல்லுக்குப் போலவே தொண்ணுாறு, தொள்ளாயிரம் என்னும்