பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 முடையதுதானே? ஆகவே, ஒன்பது என்னும் பெயர் ஒரே சொல் அன்று; ஒன்று-பத்து என்னும் இரண்டு சொற்களின் புணர்ச்சியே யாகும் என்பது போதரும். இனி, ஒன்று-பத்து என்பது பெருக்க லாகக் கொள்ளப்படாமல் ஒன்பது (10 - 1 = 9) எனக் கழித்தலாகக் கொள்ளப்பட்ட வரலாற்றை ஆய்வாம்: - தொன்று தொட்டே ஒன்பது என்னும் எண்ணேக் குறிக்கத் தொண்டு என்னும் சொல் வழக்காற்றில் இருந்து வந்தது. இதனே, t தொண்டு தலையிட்டபத்துக்குறை யெழுநூற்று. தொடித் திரிவன்ன தொண்டு படு திவவின்'. 'ஆறென ஏழென எட்டெனத் தொண்டென. "தொண்டிருந் துன்பம் தொடரும். தொண்டு படு திவவின் முண்டக கல்யாழ்'. முதலிய ஆன்ருேர் ஆட்சிகளால் அறியலாம். எனவே, பண்டை நாளில் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு ஐந்து, ஆறு ஏழு, எட்டு, தொண்டு, பத்து என ஒன்று முதல் பத்து வரையுமான எல்லா எண்ணுப் பெயர்களுமே ஒரே சொல்லா யிருந்தமை புலகுைம். இவற்றுள் தொண்டு’ என்னும் பெயரை மக்கள் நாளடைவில் மறந்து அதன் இடத்தில் ஒன்பது என்னும் பெயரை உறுதிப்படுத்தி விட்டனர். இதற்குப் பொருத்தமான பொருட்டு (காரணம்) உண்டு: r r

y: 1 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-செய்யுளியல் பேராசிரியம் - 101. 2 மலைபடு கடாம்-வரி 21 3 பரிபாடல் : 3-79. 4 ஏலாதி - 72, 5 ஆசிரிய மாலை.