பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 எட்டாம் பெருக்கின பத்து எண்பதானம் போலவே ஒன்றுானப் பத்தாற் பெருக்கின பத்தும் நூறும் தொண்ணுறும் தொள்ளாயிரமுமா மென்க. நெறி' என்றதன்ை ஒற்று இரட்டாது தொளா யிர மென்பதும் கொள்க. (பி-ம்) எண்ணின் ஒன்றுானமான பத்தானே பத்தும் நூறுமான மொழிகள் 'ணகார ளகாரமாக 'இரட்டியாது. - e —O— மேலே, நன்னூல் நூற்பாவுக்கு ஏற்ப மயில் நாதர் உரை யெழுதியுள்ளார். ஆனல் நன்னூலில் கூறப்பட்டுள்ள புணர்ச்சி முறை பொருங்தாது எனபதை நாம் முன்னரே கண்டுள்ளோம். எனவே, நூற்பாவைப் பற்றியும் அதன் உரையைப் பற்றியும் இப்போது இங்கே கவலையில்லை. மயிலநாதர் உரை யின் இடையிடையே காணப்படும் ஒன்றுானப் பத்து', 'ஒன்றுானமான பத்து' என்னும் தொடர் களே இங்கே நாம் எடுத்துக்கொண்டு ஆராய வேண்டியவை. இங்கே, ' ஒன்றுனமான பத்து-ஒன்பது : -- அஃது அக்காலச் சொல்'. - என்று மயிலைநாதர் கூறியுள்ள விளக்கம் மிகவும் ஊன்றி நோக்கற்பாலது. ஒன்பது என்னும் எண் ஒன்றுானமான பத்து என அழைக்கப்பட்டதாகவும் அஃது அக்காலச் சொல் என்பதாகவும் மயிலேநாதர் கூறியிருப்பதை மறப்பதற்கில்லை. ஒன்றுானமான பத்து என்பது ஒன்றுானப் பத்து என இன்னும் சுருங்க வழங்கப்பட்டதாகவும் அவரது உரையால்