பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 | தெரிகிறது. அதாவது, ஒன்ருெழி பத்து - ஒன்று குறை பத்து - என்பது அதன் பொருள். ஒன்று குறை பத்தின் சுருக்கமே ஒன்பது' என்பதாகும். இலத்தீனில் பத்தொன்பது (19) எ ன் ப து 'ஒன்று குறைந்த இருபது - undeviginti - என அழைக்கப்படுதல் போல, தமிழில் ஒன்பது (9) என்பது ஒன்று குறைந்த பத்து என்னும் பொரு ளில் அழைக்கப்படுதல் ஈண்டு ஒப்புநோக்கி மகிழற் பாலது. இதே பாதையில் சென்ருல் தொண்ணுாறு, தொள்ளாயிரம் என்னும் எண்ணுப் பெயர்கட்கும் தீர்வு காணலாம். ஒன்பது + பத்து என்னும் இரு சொற்களும் இணைந்து தொண்ணுாறு’ என்று ஆகியிருப்பதாக வும், ஒன்பது + நூறு என்னும் இரு சொற்களும் இணைந்து தொள்ளாயிரம் என்ருகியிருப்பதாகவும் தொல்காப்பியரும் நன்னூலாரும் கூறியிருப்பதை நாம் முன்னரே மறுத்துள்ளோம். அது போலவே, முதலில் 9000 என்னும் எண்ணைக் குறித்து வந்த தொள்ளாயிரம் என்னும் பெயர் பின்னர் 900 என்னும் எண்ணையும், 900 என்னும் எண்ணைக் குறித்து வந்த தொண்ணுாறு’ என்னும் பெயர் பின்னர் 90 என்னும் எண்ணையும் ஒவ்வொரு படி யிறங்கிக் குறிக்கத் தொடங்கிவிட்டன என்று தேவநேயப் பாவாணர் கூறியிருப்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, தொண்ணுாறு, தொள் ளாயிரம் என்பவற்றிற்கு உரிய புணர்ச்சி விதியை இங்கே நாம் கண்டாக வேண்டும். இது மிக மிக எளிய புணர்ச்சி விதி; அதோடு இயற்கை