பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அப்போது ஒன்பதின் இடத்தில் பத்து இருந்ததால், அப்போதும் பத்துப் பத்து நூறு (10X10=100) என்றுதான் சொல்லப்பட்டது. ஆனல் அப்போது நூறு (100) பழங்கள் என்று சொல்லப்பட்டவற்றை எண்ணிப் பார்த்தால் (9x9=81) எண்பத்தொரு பழங்களே இருக்கும். இதேபோல அ ப் போ து ஆயிரம் பழங்கள் என்று சொல்லப்பட்டவற்றை எண்ணிப்பார்த்தால் (81x9=729) எழுநூற்று இருபத்தொன்பது பழங்களே இருக்கும். ஆயினும் அப்போதும் பத்து நூறு ஆயிரம்'(100x10=1000) என்றே சொல்லப்பட்டது; அந்த 1000 எ ன்.ப து இப்போதுள்ள 729 தான். இந்த கிலேயில் புதிதாக ஒன்பது (9) என்னும் எண் முளைத்தது. அதையும் சேர்த்து 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 - எனப் பத்து எண்கள் கணக்கிடப் பட்டன. புதிய பத்தைப் பத்தால் பெருக்க இப்போ துள்ள நூறு கிடைத்தது; புதிய நூறைப் பத்தால் பெருக்க இப்போதுள்ள ஆயிரம் கிடைத்தது. இவ்வாருக, அடிப்படை எண்ணில் புதிதாக ஒன்று கூடியதால், பழைய பத்தின் இடத்தையும் பழைய நூறின் இடத்தையும் பழைய ஆயிரத்தின் இடத்தை யும் வேறு எண்கள் பிடித்துக்கொள்ள, புதிய பத்தும் புதிய நூறும் புதிய ஆயிரமும் தோன்றின. இங்கிலேயில் புதிதாய் வந்தவற்றிற்குப் பெயர் கொடுக்க வேண்டுமே! முன்னர் எட்டை யடுத்துப் பத்து இருந்தது; பின்னர் மேலும் ஒர் எண் முளைத்துவிட்டதால், எட்டை யடுத்திருந்த பத்து பின்னர்ப் பழைய பத்து