பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பொருளில் தொன்பது (ஒன்பது) - தொண்ணுாறு - தொள்ளாயிரம் என்னும் பெயர்கள் உருவாயின என்று கூறுவது சிறிதும் பொருந்தாதென மறுக்க. எனவே, குறிப்பிட்ட ஒரு பகுதி - அதாவது, பத்தில் ஒரு பகுதி குறைந்த பத்து-குறைந்த நூறுகுறைந்த ஆயிரம் எ ன் னு ம் பொருளிலேயே ஒன்பது - தொண்ணுாறு - தொ ள் ள யி ர ம் என்னும் பெயர்கள் உருவாகியுள்ளன என்னும் உண்மை நமது ஆராய்ச்சியால் போதரும். இந்த ஆராய்ச்சிக்கு இலத்தீன் எண் அமைப்பு முறைகள் சில ஒத்திருப்பதும் நமக்குத் துணைபுரிகிறது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்னும் நன்கு எண்ணிப் பார்ப்பார்களாக! \ 米 米 # பிற்சேர்க்கை : 'தொண்டு’ என்பது 'ஒழுக்கம் கெட்டவர்' என்னும் இழிபொருளையும் தருவதால் அதன் இடத்தை ஒன்பது’ பிடித்துக்கொண்டது என முன்னர்க் (பக்கம்-16) கூறப்பட்டுள்ளது. ? என்னும் எண்ணைக் குறிக்கும் ஏடு” என்னும் தெலுங்குச் சொல் அழுகை' என்னும் தீப்பொருளே யும் தருவதால், அதற்குப் பதிலாக, ஆறும் ஒன்றும் சேர்ந்தது (6+1=7) என்னும் பொருளில் "ஆறுன்னெகட்டி என்னும் உயர் வழக்காறு தெலுங்கில் (ஆந்திராவில்) இருப்பது ஈண்டு ஒப்புநோக்கி மகிழ்தற்குரியது. م-- s b seسـے