பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இலத்தீனில் 'V'என்பது ஐந்தையும்,' என்பது ஒன்றையும் குறிக்கும் 'V' என்பதற்கு முன்னல் ‘1’ என்பதைப்போட்டு IV என எழுதினல், ஐந்தில் ஒன்று கழிய, "நான்கு (IV=4) எனப் பொருள்படும். இதுபோலவே, பத்தைக் குறிக்கும் 'X' என்பதற்கு முன்னல் ‘1’ இதைப் போட்டு 'IX என எழுதினல், பத்தில் ஒன்று கழிய, 'ஒன்பது (IX=9) எனப் பொருள்படும். மற்றும், C என்பது நூறையும் 'X' என்பது பத்தையும் குறிக்கும் ; 'C' என்பதற்கு முன்னுல் 'X' என்பதைப்போட்டு "XC" என எழுதின், நூறில் பத்து கழிய, தொண்ணுாறு’ (KC=90) எனப் பொருள்படும். இவ்வாருக, எழுதும் வரி வடிவத்தில் பெரிய எண்ணுக்கு முன் சிறிய எண்ணேப் போட்டு எழுதிக் கழித்துக் குறைப்பது ஒருபுறமிருக்க, பேசும் பேச் சொலி வடிவத்திலும் பெரிய எண்ணுக்கு முன் சிறிய எண்ணைக் கூறிக் கழித்துக் குறைக்கும் முறை இலத்தீனில் உள்ளது. 18, 19-28, 29-38, 39 என்பன போல 8, 9 என்னும் எண்களில் முடியும் கூட்டெண்களைக் குறிக்கும் பெயர்களில் இம்முறை யைக் காணலாம். எடுத்துக்காட்டு : Viginti’ என்ருல் இருபது என்றும், un' என்ருல் ஒன்று' என்றும், "de' என்ருல் அதி லிருந்து நீங்குவது' (from) என்றும் பொருளாம். 6T @rGaJ, un--de + viginti = undeviginti 6r6ìì (jpôù இருபதிலிருந்து ஒ ன் று நீங்கியது - அதாவது, பத்தொன்பது (20-1=19) என்று பொருளாம்.