பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

103



அதே சமயத்தில், வலது காலை தரையில் படாதவாறு சிறிது உயரே தூக்கியவாறு வைத்திருக்க வேண்டும்.

அடுத்து, வலது காலை செங்குத்தாக மேலே உயர்ததும்பொழுது, மேலே இருக்கும் இடது காலானது தரையை நோக்கித் தாழ வேண்டும். ஆனால் தரையினைத் தொடவே கூடாது.

இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி ஏற்றி இறக்க வேண்டும். தேவையானால் மூச்சினை விட்டு விட்டு இழுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே மூச்சில் பல முறை இந்தப் பயிற்சியைச் செய்வது தான் நல்லதாகும். (20 தடவை)

(13) மல்லாந்து படுத்துக் கொண்டு கைகளைப் பக்கவாட்டில் (சிலுவை போல), விரித்து வைத்திருக்க வேண்டும். நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது, வலது காலைத் தூக்கிக் கொண்டு இடது கை விரல் பகுதியை நோக்கிச் சென்று தொட வேண்டும்.

பிறகு, முன்படுத்திருந்த நிலைக்கு வந்தவுடன் தான் மூச்சை வெளியே விட வேண்டும்.

அதன் பின்னர் மூச்சை இழுத்துக் கொண்டு, இடது காலால் வலது கைப் பகுதியைத் தொட வேண்டும்.