பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

106



(15) கைகள் இரண்டும் உடலுக்குப் பக்கவாட்டில் இருப்பது போல வைத்துக் கொண்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.

கால்களை விறைப்பாக நீட்டியிருக்க வேண்டும்.

நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது, கால்களை அப்படியே மேலே தூக்கி, தலைக்குப் பின்புறமாகக் கொண்டு சென்று, தலைக்கு அப்பாலுள்ள தரைப் பகுதியைத் தொட வேண்டும்.

தொட்டு விட்டு, மீண்டும் மல்லாந்து படுத்த நிலைக்கு வந்த பின்னரே மூச்சினை விட வேண்டும்.

குறிப்பு: மிகவும் சிரமமான பயிற்சி இது. பல நாட்கள் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால்தான் வரும்.

அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ செய்தால், கழுத்து பாகம் சுளுக்கிக் கொள்ளும். முதுகுப்புறம் வலிக்கும். வேதனை அதிகரிக்கும். ஆகவே, பக்கத்தில் உதவிக்கு யாரையாவது வைத்துக் கொண்டு, மெதுவாக செய்து பழகவும்.

மேலே கூறியிருக்கும் பதினைந்து பயிற்சிகளையும் ஒழுங்கா உறுதியாகத் தொடர்ந்து, நம்பிக்கையுடன்