பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

33



என்று அலுவலகத்தில் பணியாற்றும் அன்பர்கள் என்னிடம் கேட்டதுண்டு.

ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே, அதிக நேரம் வேலை செய்தவாறு இருந்தால், நிச்சயம் தொந்தி வரத்தான் செய்யும். அலுவலக எழுத்தர்கள், தட்டெழுத்தாளர்கள் போன்ற பணிபுரிபவர்கள் அனைவரும், ஓரிடத்தில் அமர்ந்தே வேலை செய்யும்போது, அடி வயிறு மடங்குவது போல்தான் அவர்கள் உட்கார்ந்திருக்கின்றனர்.

அதிக நேரம் வயிறு மடிந்திருக்கும் பொழுது, வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. அவை அழுத்தப்படுவதன் காரணமாக, இயல்பாக இயற்கையாக செயல்படமுடியாமற் போகவே, சீரணம் தடைப்பட்டுப் போகின்றது.

இதுபோலவே உட்கார் ந்தே வியாபாரம் செய்பவர்களும், உட்கார்ந்து, அமர்ந்து உறங்கிப் பொழுது போக்குகின்றவர்களும் இந்தத் தொந்தியால் நிச்சயமாக ஆட்படுத்தப்படுகின்றனர். மேலும் புகைபிடிப்பதும், சீரண பகுதிகளை பாதிக்கிறது என்றும் அறிவியல் விரித்துரைக்கின்றது.

விளையாடினால் தொந்தி வருமா?

பொதுமக்களிடையே அதுவும் படித்தவர்களிடையே உலவுகின்ற இன்னொரு தப்பபிப்ராயம் இருக்கிறது. அதையும் இங்கே விவரிப்பதும் விவாதிப்பதும் அவசியமாகின்றது.