பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

57



இந்த அடிப்படையில் தான் உடலின் எடையானது அமைந்திருக்கிறது என்பது ஆய்வறிஞர்களின் முடிவாகும். உடல் எடை என்று என இருந்தால் இது இப்படியாக அமையும்.

1. 1/2 பாகம் தசைத்திசுக்கள் (Muscle Tissue)

2. 1/5 பாகம் இணைத்திசுக்கள் (connective Tissues)

3. 1/10 பாகம் எபிதிலியம் (Epithelium)

4. 1/10 பாகம் இரத்தத்திசுக்கள் (Blood Tissue)

5. 1/10 பாகம் நரம்புத் திசுக்கள் (Nerve Tissue)

களைப்பு எப்படி ஏற்படுகிறது.

உடல் உறுப்புக்கள், நொடிக்குநொடி, உற்சாகமாக உழைத்துக் கொண்டிருக்கின்றன. ஒப்புயர்வற்ற வகையில் உற்பத்திகளைப் பெருக்கி உன்னத வளர்ச்சிகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

அப்பொழுது அவயவங்களுக்கு இடையே ஆரவாரித்துக் கொண்டு எழுகின்ற கழிவுப் பொருட்கள் உடலுக்கு உள்ளே தேங்கி விடாமல் உடனுக்கு உடன் வெளியேற்றி விடுவது என்பது உடலின் திறமையான செயல் கூறாகும்.

கூடி குவிந்துவிடும் கழிவுப் பொருட்களை கூட்டி வைத்துத் தேக்கிக் கொண்டு விட்டால் தேகமானது திணறிப் போய்விடுகிறது. திக்கித் திகைத்துப் போய் விடுகிறது.