பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

61



7. ஒடிப் பழகும்போது உண்டாகும் நன்மைகள்

ஒட்டப் பயிற்சியின் போது, உடலில் உண்டாகும் மாற்றங்களை நினைத்தாலே நெஞ்சம் மகிழும் நடந்தாலோ தேகம் குளிரும்.

ஓடுவது வேலையற்ற வேலை என்று சாடுபவர்கள் அநேகம். அவர்கள் விவரமற்றவர்கள். விவேகமும் இல்லாதவர்கள்.

ஓடுவது மனிதன் செய்யக் கூடிய காரியமா! அது மிருகங்களுக்குத் தேவை. மனிதர்களுக்கு அநாவசியம் என்று ஆர்ப்பரிப்பவர்கள் அநேகம். அவர்கள் மனிதத் தவளைகள். மனிதன் என்ற பெயரிலே உலவும் வாயில்லா ஜீவன்கள்.

ஒட்டம் வாழ்க்கையின் ஆரம்பம், ஓட்டத்தில் வெற்றி பெற்ற ஒரு ஜீவ அனுதான் உடல் எனும் உருவத்தைப் பெற்று, உயிர் என்ற ஜீவியத்தைப் பெற்று, உலா வந்திருக்கிறது! எப்படி?

தாயின் கர்ப்பப்பையை நோக்கி, தந்தை ஒருவனது வீரியம் மிகுந்த விந்திலிருந்து, 225 லட்ச அணுக்கள் 8 மணி நேர மாரதான் ஓட்டத்தை ஆடுகின்றன.