பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்

67



முழுதிற்கும் அனுப்பி வைக்க உதவுகிறது. அதனால் சுறுசுறுப்பாகவும் சுய எழுச்சியோடும் நாள் முழுதும் இருந்திட ஒட்டம் உதவுகிறது.

14. நோய்கள் இல்லாத தேகமே இந்த உலகில் இல்லை என்பார்கள். உள்ளே அடங்கிக் கிடக்கும் நோய்கள், உடல் நோய் அடையும் நேரம் பார்த்து எழுச் சி யடைந் து, வேதனைப் படுத் த த் தொடங்கிவிடுகின்றன. ஆகவே, உடலை தளர்ச்சியடைய விடாமற்பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகிறது.

தினந்தோறும் ஓடுகிற ஒட்டமும், செய்கிற உடற்பயிற்சியும் உயிர்க் காற்றை உள்ளிழுக்கும் ஆற்றலை அதிகப்படுத்தி, நோய்கள் தலையெடுக்காமல் தடுக்கின்றன. விரட்டுகின்றன. ஒழித்தும் விடுகின்றன.

பயங்கர நோய் களிலிருந்து காக்கின்ற பெருந்துணையாக ஓட்டம் உதவுகின்றது.

வாழ்விற்கு வளமான வழிகாட்டியாக விளங்கும் ஒட்டத்தில் நீங்களும் பங்கு கொள்ளலாமே!