பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வானிற் பறக்கும் பருந்தும் மண்ணிற் படியும் அதன் நிழலும் ஒன்றை யொன்று தொடர்ந்து அமையுமாறு போன்று ஒரு நூலின் மூலமும் அதற்கு எழுதப்பெற்ற உரையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்புடையனவாயிருத்தல் வேண்டும். மூலத்திற் குறிக்கப்படும் தொகைகள் அந்நூலின் முன்னோ பின்னோ அன்றி நூலாசிரியன் காலத்து உலக வழக்கிலேயோ நிலை பெற விளக்கப் பெற்றனவாதல் வேண்டும். இம்முறையினை உளங் கொண்டு வரையப் பெறுவதே நூலாசிரியன் கருத்தையுணர்ந்து எழுதப் பெறும் மெய்யுரையாகும். இவ்வுயர்ந்த நோக்குடனேயே நாவலர் பாதியாசவர்களும் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புதிய வுரையினை எழுதத் தொடங்கினார்கள். அவர்தம் புத்துரையின் இன்றியமையாமையினைப் புலப்படுத்தும் சில நூற்பாக்களின் உரை நலத்தை இங்கு எடுத்துக்காட்டுதல் பொருத்தமாகும் என்று எண்ணுகின்றேன்.

பண்டைத் தமிழர் மேற்கொண்டொழுகிய அகத்திணை யென்பது, ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் பலபிறப் புக்களிலும் கணவனும் மனைவியுமாக ஒன்றி வாழ்ந்த நல்லுரழின் ஆணையால் ஓரிடத்து எதிர்ப்பட்டுக் காதற் கேண்மையினராய் ஒழுகிப் பின் உலகத்தார் அறிய மணந்து வாழும் குடும்ப வாழ்வாகும். இவ்வொழுகலாற்றின் பொது இலக்கணம் உணர்த் துவது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் முதற்கண்ணதாகிய அகத்திணையியலாகும். இது கைக்கிளை அன்பின் ஐந்திணை பெருந்தினை என எழுதினையாகப் பகுத்துரைக்கப்படும். இவற்றுள் உரிமை வகையால் நிலம் பெறுவன, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்னும் அன்பின் ஐந்திணைகளுள் நடுவணதாகிய பாலை நீங்கலாக ஏனை நான்குமேயாகும். மேற்குறித்த நானிலத்திடைப் பொதுவகையால் நிகழ்வன. கைக்கிளை, பெருந்தினை, பாலை என்பன. அவற்றுட் பாலைத்திணை, நடுவனது என வழங்கப்பட்டு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நால்வகை யொழுக்கமும் நிகழுங்கால் அந்நான்கனுள்ளும் பிரிதற்பொருட்டாய் நிற்கும் என்னும் குறிப்புக் களும் திணைப்பாகுபாடாகிய முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள் பற்றிய விளக்கங்களும், அன்பின் ஐந்திணை யொழுகலாற்றுக்கு உரிமையுடைய தலைமக்கள் இன்னின்னார்

9.