பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்பதும், அவர்தம் உரையாடல்களில் இடம் பெறுதற்குரிய உள்ளுறையுவமம் ஏனையுனமம் பற்றிய குறிப்புக்களும், இவை போன்று அகத்திணைக்குரிய பொதுப் பொருண்மைகளும் அகத்திணையியலில் உணர்த்தப் பெற்றன. அகத்திணைக்குரிய சிறப்பிலக்கணம், கனவியல், கற்பியல், பொருளியல் முதலாகப் பின்வரும் இயல்களில் விரித்து கூறப் பெற்றுள்ளன.

ஒரு திணைக்கண்ணே நிலைத்து வாழும் மக்கட் பெயர் நிலம் பற்றிய பெயரும் தொழில் பத்திய பெயரும் என இருவகைப்படும். ஆயர் என்பது முல்லை நிலத்தில் வாழும் மக்களைக் குறித்து வழங்கும் நிலப்பெயராகும். வேட்டுவர் என்பது வேட்டைத் தொழில் புரிந்து வாழும் மக்களைக் குறித்து வழங்கும் தொழிற் பெயராகும். இவை ஆண்மக்களைக் குறித்த பெயர்கள். இவ்வாறே இவர்களோடு தொடர்புடைய பெண் மக்களைக் குறித்த பெயர்களும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமை காணலாம். இங்குக் குறிக்கப்பெற்றவர்களுள் அகத்தினையொழுகலாற்றிற்குரியராய் வரும் தலைவரும் உளர். இவ்வாறே குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய ஏனை நிலங்களில் வாழும் மக்கட்பெயர்களும் அகத்தினையொழுகலாற்றிற்குரிய பெயர்களாய் நீக்காது ஏற்றுக் கொள்ளப்படுவனவாம், என நானில மக்களும் நாடாளும் வேந்தனும் வேந்தராற் சிறப்புப் பெற்று உயர்ந்தோரும் அன்பினைந்திணையொழுகலாற்றிற்குரியவராவர் என்பதனை வலியுறுத்தும் முறையில் அமைந்தன. - -

 'ஓதல் பகையே துதிவை பிரிவே' (தொல்-அகத்-25)  ‘அவற்றுள் ஓதலுந் துரிதும் உயர்ந்தோர்’                                  
                                                    (மேற்படி -26)

"தானே சேறலும் தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே’’ (மேற்படி 27). மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும் இழைத்த வொண்பொருள் முடியவும் பிரிவே” - (மேற்படி-28)

மேலோ முறைமை நால்வர்க்கும் உரித்தே'

                                                     (மேற்படி 29)     

எனவரும் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரங்களாகும்.

8}

2

{{}

10