பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எண்ணிய போரறம் பற்றிய குறிக்கோளைக்கருதியே என்ப தனையும் புலப்படுத்தும் குறிப்பினதாகும்.

இனி, பாடாண்திணையின் வகைகுறித்து நாவலர் பாரதியார் தரும் விளக்கம் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். பாடாண்திணைப்பகுதி கைக்கிளையென்னும் அகத்திணைக்குப் புறனாகும். அஃது ஆராயுங்காலத்து எட்டு வகையுடையதாகும் என்பதனைப்

"பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே . . . . . . .

நாடுங்காலை நாலிரண்டுடைத்தே' (தொல்-புறத்-20

எனவளும் நூற்பாவிற் குறிப்பிடுவர் தொல்காப்பியர், புறத்தினையுள் ஏழாவதாகக்கூறப்படும் பாடாண் என்பது. புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவர்களாற்புகழ்ந்து பாடப் பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர்களாற் பாடப்பெறும் கழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல் ஈகை முதலிய பெருமிதப்பண்புகளை ஆளுதற்றன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். இச்சொல் வினைத்தொகைப் புறத்துப் பி அன்மொழித் தொகையாய்ப் புலவராற் பாடப் பெ தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினை யுணர்த்திற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்,

ஒருநிலத்திற்கு உரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளையென்னும் அகத்தினையாகும். அது போல ஒரு பாலுக்கு உரித்தன்றி ஒருவரை யொருவர் யாதானும் ஒரு பயன் கருதிய வழிப் பாடப் பெறுவது பாடாண், இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிாக்கமல்லாத செந்திறத்தால் வருவதும் இவ்விரண்டிற்கும் ஒக்கும், பாட்டுடைத்தலைவன் பரவலுப்புகழ்ச்சியும் வேண்டப் பாடும் புலவர்கள் பரிசிற்பொருளை வேண்டும் முறையில் அமைந்தது பாடாண்திணையாதலின், இது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யென்னும் அகத்திணைக்குப் புறனாயிற்று.

குடும்ப வாழ்விலே ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயல்களாகிய அகவொழுக்

16