பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கங்களும், அச்சியல் வாழ்விலே போர் மறவர்கள் மேற்கொள்ளுதற் குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் அறுவகைப் புறத்தினையொழுகலாறுகளும் ஆகிய இவ்வொழுக் கங்கள்ை நிலைக்களனாகக் கொண்டே ஒருவர் ஒருவர்ைப்பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை ஒழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவர்பால் நிகழ்வன. பாடாண் திணையிலோ பாடுதல்வினை புலவர்பாலும் அவ்வினைக்குக் காரணமாகிய பண்பும் செயலும் பாட்டுடைத் தலைவர்பாலும் நிகழ்வன. வெட்சி முதலிய ஆறு திணைகளும் தலைமக்களுக்குரிய பண்புகளையும் செயல்களையும் நிலைக்கள மாகக் கொண்டு தோன்றுந் தனிநிலைத் திணைகளாகும். பாடாண் தினையோ தலைமக்கள் பால் நிகழும் மேற்கூறிய திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றும் சார்பு நிலைத்திணையாகும். எனவே போர் மறவர்.பால் அமைவனவாகிய வெட்சி முதலிய புறத்திணைகளிலும் குற்றமற்ற அகத்திணைகளிலும் அமைந்த செயல்கனாய்த் தலைமக்களுக்குரிய # ... .” இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெரு ப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கு அமைந்த மாந்தது ஒழுகலாறு பாட்ாண் திணையாகும் எனக் கொள்ளுதல் பொருத்த

முடையதாகும். பாடாண் அல்லாத வெட்சி முதலிய பிற திணை களும் புலவராற் பாடப்படுவனவே எனினும், புலவராற் பாடப் பெறுதல் வேண்டும் என்னும் உள்ளக் குறிப்பு பாட்டுடைத் தலைவர்பால் தோன்றாத நிலையில் அவர்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச் செயல் முதலியவற்றைப் புலப்படுத்துந் திறத்தால் அவை வெட்சி முதலிய தனிநிலைத் திணைகளாம் எனவும், அச் செயல்களைக் கருவாகக்கொண்டு புலவர்கள் பாடும் போது அங்ஙனம் தாம் பாடப்பெறுதலால் உளவாகும் புகழை விரும்புங் கருத்துடன், பாட்டுடைத் தலைவர்பால் தோன்றும் உயர்ந்த உள்ளுக் குறிப்பு பாடாண் என்னும் சார்பு நிலைத் திணையாம் எனவும் குத்துணர்தல் வேண்டும்.

நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும் உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் வண்ணம் ஆற்றல்மிக்க போர்த் துறையிலும் அன்பின் மிக்க மனைவாழ்க்கையிலும் புகழுடன்

17