பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இயற்றமிழொடு நெருங்கிய தொடர்புடையனவாய் அமைந்த இசைத் தமிழ் நாடகத் தமிழ் முடிபுகளையும் ஒப்பிட்டு விளக்கும் முறையில் பிற நூல் முடிந்தது தானுடன்படுதல் என்னும் உத்தி பற்றி வேண்டுமிடங்களில் அந்நூல் முடிபுகளை எடுத்தாளுதலை வழக்கமாகக் கொண்டுள்ளார். இச் செய்தி,

'அளவிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

உளவெண் மொழிட இசை யொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்'

(தொல், நூன்மரபு 3;

எனவும்

'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறிவழக்கம்’

(தொல்-அகத் 56)

எனவும் வரும் தொல்காப்பிய நூற்பாக்களால் இனிது விளங்கும். இங்கனமே இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பாகிய மெய்ப்பாட்டுக்கு இலக்கணம் கூறப்புகுந்த தொல்காப்பியனார், மெய்ப்பாடு பற்றி நாடகத் தமிழ் நூலார் கூறுவனவற்றையும் பெய்ப்பாட்டியல் முதலிரண்டு சூத்திரங்களில் தொகுத்துக் கூறினார் என்பது இளம் பூரணர் பேராசிரியர் ஆகிய முன்னைய உரையாசிரியர்கள் கருத்

தாகும்.

மெய்ப்பாட்டியலுரையில் தமிழ் நூலாகிய செயிற்றியச் சூத்திரங்களை இளம்பூரணர் மேற்கோளாகக் காட்டுதலானும், "அதுமுதனுலை (அகத்தியத்தை) நோக்கிக் கூறியவாறு போலும்’ எனப் பேராசிரியர் நாடகத் தமிழ் நூலையே சுட்டுதலானும் "இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும்' எனவும் 'நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்தியமுதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குண நூல் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி கானாமையின் அவை யும் இறந்தனபோலும்’ எனவும் சிலப்பதிகாரவுரையாசிரிய்ராகிய அடியார்க்கு நல்லார் இசைத் தமிழ் நாடகத் தமிழ், நூல்களின்

24