பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெயர்களைச் சுட்டி அந்நூல்கள் முத்தமிழ்க் காப்பியமாகிய சில்ப் பதிகாரத்தின் பொருட்கூறுகளையறிதற்குப் பெரிதும் துணை பாவன என்பதனையும் அவையனைத்தும் தமிழ் மரபு விளக்கும் முறையில் தமிழுக்கேயுரிய நூல்கள் என்பதனையும் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் குறிப்பிடுதலாலும் முன்னைய உரையாசிரியர் இருவரும் பிறன் கோட்கூறல் என்னும் உத்தி பற்றிக் குறிப்பீடும் நாடகத் தமிழ் நூல் பற்றிய மெய்ப்பாடு தமிழ் வழக்குப் பற்றிய மெய்ப்பாடாவதன்றி வடல் நூல் வழக்குப் பற்றிய - மெய்ப்பாடு அன்று என்ப்து நன்கு தெளியப்படும். எனவே மெய்ப்பாட்டியலுக்கு இளம்பூரணரும் பேராசிரியரும் எழுதியுள்ள உரைகள் வடநூல் வழக்கினைப்புகுத்தி இடர்ப்பட்டு கற்போரை மயங்க வைப்பன அல்ல என்பது தமிழாய்வாளர் அனைவரும் தேர்ந்து தெளிய வேண்டிய உண்மையாகும். -

, இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் அண்ணாமலைப் பல்கக்ைகழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியாரவர்கள் நுண்மாண் நுழை புலங்கொண்டு ஆசாய்ந்துதொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணையியல் புறத்திண்ையியல், மெய்ப்பாட்டியல் ஆகிய இயல்களுக்கு எழுதிய உரைப்பகுதிகளில் அகத்திணையியல் புறத்திணை இயல் களில் உள்ள சில நூற்பாக்களுக்கு முன்னை யுரைகளில் தமிழ் மரபுக்கு மாறுபட்ட கருத்துக்களை ஏதுக்கள் பலகாட்டி விலக்கியும் அந்நூற்பாக்களில் ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்திய உண்மைப் பொருள் இவையெனத் தமிழ்மரபு சிதையாதபடி மெய்யுரைவரைந்தும் ஆரியர் முதலிய அயலவர் கொள்கைக்குச் சிறிதும் இடந்தராது தமிழுக்கேயுரிய மரபுகளைப் புலப்படுத்து வதே தமிழியல் நூலாகிய தொல்காப்பியம் என்னும் பேருண் மையினை வற்புறுத்தியும் தமிழ்மக்களது தொன்மை நாகரிகத் தினையும் தமிழின் தனித்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார் கிள் என்பது ஒருவாறு விளக்கப் பெற்றது.

தொல்காப்பிய ஆராய்ச்சியில் தமிழ் மாணவனாகிய என்னை ஆர்வமுடன் ஈடுபடுத்திப்பணி கொண்டு வாழ்வித்த என்னுடைய பேராசிரியப் பெருந்தகை நாவலர் பாரதியார் பெயரால் நிறுவப்

25