பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

受弹芯円 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மயங்குதலாவது ஒருங்குவருதல். நேர் நிரை நேர்பு நிரைபு என்னு நான்கினையுந் தம்மினுறழப் பதினாறு அசைச்சீராம் ! அவற்றுள் இயலசையாகிய நேரும் நிரையுந் தம்மின் உறழ நான்கு சீராம் அவை இயற்சீர் எனப்படும். உதாரணம் 'தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்” என வரும். இனி உரியசையாகிய நேர்பு நிரைபு மென்றவற்றைத் தம்மினுறழ நான்குசீராம். அவை ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ! உதாரணம் ஆற்றுநோக்கு, ஆற்றுவரவு, வரகுசோறு, வரகுதவிடு” என வரும். (க.உ) இது, நிறுத்தமுறையானே இயலசையும் உரியசையும் வேறு வேறு தம்முண் மயங்கிவரும் ஈரசைச்சீ ருணர்த்துகின்றது. (இ - ள்.) நேர்நேர் 2நிரைநேர் நிேரைநிரை நேர்நிரை என்பன நான்கும் இயற்சீர்; நேர்புநேர்பு நிேரைபுநேர்பு நிேரைபு நிரைபு நேர்புநிரைபு என்பன நான்கும் ஆசிரியவுரிச்சீர் (எ - று). இவற்றுள் இயற்சிரைத் தேமா புேளிமா கணவிரி பாதிரி எனவும், 1வாய்க்கால் 2வாய்த்தலை துலைவாய் துலைமுகம் எனவும் (யா. வி. ப. 66) பிறவும் இன்னோரன்ன வேறு வேறு காட்டுட. இனி, வருவனவற்றிற்கும் இஃதொக்கும். ஆசிரிய வுரிச்சீரை 1வீடுபேறு வரகுசோறு தேடவுமருது 4பாறுகுருகு எனவுங் காட்டுப. அவற்றுக்குச் செய்யுள் : 'அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே' (குறுந், 216) 1. இத்தொடர் நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கினையும் தம்மின் உறழப் பதினாறு ஈரசைச் சீராம் என்றிருத்தல் வேண்டும். உறழ்தல்-பெருக்கல். நேர், நிரை என்னும் இயலசை இரண்டும் கூடிவந்த ஈரசைச் சீர் இயற்சீர் எனவும் நேர்பு நிரைபு என்னும் உரியசை கூடிவந்த ஈரசைச்சீர் ஆசிரியவுரிசி சீர் எனவும் பெயர்பெறும். எ-று,