பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கஉ .ييf Gr தென்னையெனின், இவ் விருபகுதியவற்றை இயற்சீரென்றும் (331) ஆசிரியவுரிச்சீரென்றும் (335) ஆளுமாகலின் என்றவாறு.1 நச்சினார்த் திரிையம் : இது முறையானே இயலசையும் உரியசையும் வேறு வேறு தம்முண் மயங்கிவரும் ஈரசைச்சீர் உணர்த்திற்று. இ-ள். இயலசை மயங்கினவற்றை இயற்சிரென்றும் உரியசை மயங்கினவற்றை ஆசிரியவுரிச்சீரென்றும் கூறுப. எ-று. மயக்கம் என்றது தம்மொடு தாமயங்குதலும் தம்மொடு பிறிது மயங்குதலுமாம். உ-ம். நேர்நேர், நிரைநிரை எனத் தம்மொடுதாமயங்கின; இரண்டினையும் பிரித்து நேர்நிரை நிரைநேர் எனப் பிறிதொடுமயக்க இந்நான்கும் இயற்சீராயிற்று. இந்நான்கு வழியுமல்லது வேறுகூட்டமின்மையும் உணர்க. இவற்றைத் தேமா, புளிமா, பாதிரி, கணவிரி எனவும் கருவிளம் கூவிளம் எனவும் காட்டுப; பிறவாறுங்காட்டுப, நேர்புநேர்பு நிரைபுநீரைபு எனத் தம்மொடு தாமயங்கின. இரண்டினையும் பிரித்து நேர்புநிரையு, நிரைபுநேர்பு எனப் பிறிதொடுமயக்க இந்நான்கும் ஆசிரியவுரிச்சீராயிற்று. இவற்றை வீடுபேறு, தடவுமருது, பாறுகுருகு, வரகுசோறு எனக்காட்டுப. செய்யுள்: "அவரே கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை" (குறுந்தொகை-உககள்) என நான்கியற்சீரும் வந்தன. (போரேறு), நேர்நிரைபு (பூமருது) நிரைநேர்பு (கடியாறு), நிரைநிரைபு (மழகளிறு) என்னும் ஆறினையும். இவையாறும் நேரவனிற்பின் இயற்சீர்ப்பால' (செய்யுளியல் - கரு) "இயலசையீற்றுமுன் உரியசைவரினே நிரையசையியலவாகுமென்ப" (செய்யுளியல் - கச) என இவ்வியலிற் பின்வருஞ் சூத்திரங்களாற் கூறப்படுவன. 1. இயற்சீர்களாகிய இவற்றைச் சொல்லி முடிப்பதற்கு முன் ஆசிரியவுரிச் சீரை இங்குக்கூறியதன்நோக்கம், இயலசையாலாகிய ஈரசைச்சீர்தான்குமே இயற்சீராமென்றும் உரியசையாலாகிய ஈரசைச்சீர் நான்குமே ஆசிரியவுரிச்சீரா. மென்றும் ஈண்டுச் சிறப்பித்து எடுத்தோதப்படும் என அறிவித்தற்பொருட்டாம் என்பது கருத்து ,