பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் قتی وسی 'வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப’ எனவும் 'நறவுண் மண்டை நுடக்கலி னிறவுக்கலித்து' (அகம் - கசு) எனவும் "பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வன்' எனவும் 'வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்' (திருமுருகாற்றுப்படை) எனவும் வந்தவற்றுள் வீற்று வீற்று எனவும் இறவுக்கலித்து எனவும் பூண்டுகிடந்து எனவும் வசிந்துவாங்கு எனவும் நான்காசிரியவுரிச்சீரும் வந்தன. நான்கு பாவிற்கும் இயற்றலானும், இயல்புவகையான் ஒரோசொல்லாய் வருதல் பெரும்பான்மை யாகலானும் இயற்சீரெனவும், ஆசிரியத்திற்கு உரிமையான் உரிச்சீரெனவும் ஆட்சியுங்குணமுங் காரணமாகப் பெற்றபெயர். "இயற்சீ ரிறுதிமுன்” (செய் - கசு) எனவும் "வெண்பா வுரிச்சி ராசிரிய வுரிச்சீர்” (செய் - உங்.) எனவும் பிறாண்டும் ஆள்ப. ஆய்வுரை : இஃது இயலசையிரண்டு தம்முட் கூடியும் உரியசையிரண்டு தம்முட் கூடியும் இருவகை ஈரசைச் சீர்களாமாறு கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கி வந்தன இயற்சீரெனப்படும். உரியசை மயங்கி வந்தன ஆசிரியவுரிச்சீர் எனப்படும் எ-று. நேர் நிரை நேர்பு நிரைபு என்னும் நான்கு அசைகளையும் முதலசைகளாக நிறுத்தி அவற்றின்முன் அந்நான்கிசைகளையும் இரண்டாம் அசைகளாக வருவித்து ஒன்றோடொன்று கூட்டிப் 1. வீற்றுவீற்று - நேர்புநேர்பு, இறவுக்கலித்து - நிரைபுதிரைபு இவை தம்மொடுதாம் மயங்கின. பூண்டுகிடந்து - நேர்புநிரைபு வசிந்துவாங்கு - நிரைபுநேர்பு இவை பிறிதொடு மயங்கின.