பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக. والتي ونيسي பெருக்க ஈரசைச் சீர்கள் பதினாறாகும். அவற்றுள் நேர், நிரை என்னும் இயலசையிரண்டனையும் பெருக்கப் பிறந்த ஈரசைச் சீர்கள் நான்கும் இயற்சீர் எனப் பெயர்பெறும். அவை தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பன. நேர்பு, திரைபு என்னும் உரியசை யிரண்டனையும் பெருக்கப் பிறந்த ஈரசைச் சீர்கள் நான்கும் ஆசிரியவுரிச்சீர் எனப் பெயர்பெறும். அவை ஆற்றுநோக்கு, ஆற்றுவரவு, வரகுசோறு, வரகுதவிடு என்பனவாகும், கங் முன்நிரை இறினும் அன்ன வாகும். இளம்பூரணம் : என் - எனின். இதுவும் ஆசிரியவுரிச்சி ராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்.) நேர்பசை நிரைபசைப்பின், நிரை யிறுதியும் ஆசிரியவுரிச்சீரா மென்றவாறு.? உதாரணம் “யாற்றுமடை, குளத்துமடை" என வரும். . இஃது, இயலசையும் உரியசையும் மயங்கியாவன கூறு கின்றது. (இ - ள்.) "உரியசை மயக்கம் ஆசிரிய வுரிச்சீர்” (தொல், செய். 13) என மேனின்ற அதிகாரத்தான் அவ்வுரியசைப் பின்னர் நிரையசையுறினும் அவ்வுரியசை மயக்கமாகிய ஆசிரிய வுரிச்சீராம் (எ - று).3 1. முன்னிரையுறினும் என்பது, பேராசிரியருரையிற் கண்டபாடம். 2. முன் நிரை இறுதலாவது, நேர்பு, திரைபு என்னும் உரியசையின் பின் நிரைவந்து நேர்புநிரை. யாற்றுமடை, நிரைபுநிரை-குளத்துமடை என நிரையீறாய் முடிந்து திற்றல். அன்னவாதலாவாது முற்கூறிய ஆசிரியவுரிச்சீரின் தன்மையவாதல், 3. உரியசைமயக்கம் ஆசிரியவுரிச்சீர் என்பது மேல்நின்ற சூத்திரமாதலின், இங்கு திரையுறுதல்’ என்றது முற்குறித்த உரியசையின் பின் நிரையசை வந்து மயங்கி ஈரசைச்சீராதலைக் குறித்து நின்றது. நேர்புநிரை - நீடுகொடி நிரைபுநிரை - குளிறுபுலி உரியசையும் இயலசையும் கலந்துவந்த ஈரசைச் சீர்களாகிய இவையிரண்டும் ஆசிரியவுரிச்சீர்போலக்கொள்ளப்படும் என்பதாம்.