பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் அவை, நேர்புநிரை, நிேரைபுநிரை என வரும். இவற்றை 1.நீடுகொடி நோனுத்தளை குேளிறுபுலி விரவுக்கொடி எனவும் பிறவாற்றானுங் காட்டுப. அவையெல்லாம் அறிந்து கொள்க. மற்று, இயலசையும் உரியசையும் விரவி இயற்சீராவன இலவோ வெனின் உள; அவையன்றே மேற்சொல்கின்றனவென்பது. அஃதேல், இவ்விரண்டும் இயற்சீராகாவோவெனின், “அன்ன’’ வென்று மாட்டெறிந்த கருத்தினான் அதுவும் அமையுமென்பது: என்றார்க்கு, இவற்றை ஆசிரியவுரிச்சீரென்றல் குற்றமாம் பிற வெனின், பெரும்பான்மையும் ஆசிரியத்திற்கும் அதற்கினமாகிய வஞ்சிக்கும் உரியவாகலானும், ஒழிந்த இரண்டு பாவின்கண்ணுஞ் சிறுவரவின வாகலானும், வெண்பாவினுட் கட்டளையடிக்கண் வாராவென்பது, "கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (தொல், செய்.24) என வரைந்தமையாற் பெறுதுமாகலானும் இவற்றை ஆசிரிய வுரிச்சீ ரென்றலே வலியுடைத்தென்பது! அன்னவென்பதனை இயற்சீரொடு மாட்டுங்கால் ஈற்றது அதிகாரம்பட இறுதிநின்ற நிரையீற்றியற்சீ ரிரண்டனோடுங் கொள்ளப்படும்; கொள்ளவே, அம்முறையானே நீடுகொடி என்பதனைப் பாதிரி போலவுங் குளிறுபுலி என்பதனைக் கணவிரி போலவுந் தளைகொள்ளப்படு மென்பதாம்.2 அவை செய்யுளுள் வருமாறு :

ஒங்குமலைப் பெருவிற் பாம்பு.ஞாண் கொளி இ’ (புறம். 55)

எனவும், 1. நேர்பு நிாை (நீடுகொடி) நிரைபுநிரை (குளிறுபுலி) எனவரும் இவையிரண்டும் பெரும்பாலும் ஆசிரியத்திற்கும் அதற்கினமாகிய வஞ்சிக்கும் உரியன. வாதாலானும் ஒழிந்த இரண்டுபாக்களின் சிறுவரவினவாதலானும், வெண்பாவிற் கட்டளைக்கண் இவை வருதல் இல்லையென்பது கலித்தளை மருங்கிற்கடியவும் படா (செய்-24) என வரைந்தமையாற் பெறப்படுதலானும் இவற்றை இயற்சீர் என்னாது ஆசிரியவுரிச்சீர் என்றலே வலியுடையதாகும். 2. இவையிரண்டும் நிரையசையால் இறுதல் பற்றி அன்ன என்னும் மாட்டேற்றினை நிரையிற்றியற்சீரிரண்டனோடும் இயையக்கொள்ளுங்கால் நீடுகொடி (நேர்புநிரை) என்பது பாதிரி (நேர்நிரை) போலவும், குளிறுபுலி (திரைபுநிரை) என்பது கணவிரி (நிரைநிரை) போலவும் தளை கொள்ளப்படும் என்பர் பேராசிரியர்.