பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கரு கூகு அவை நேர்புநேர், நிரைபுநேர்; உ-ம். சேற்றுக்கால் வேணுக்கோல், களிற்றுத்தாள், முழவுத்தோள் எனவரும்; நீத்துநீர், குளத்துநீர் எனவும் போதுபூ, மேவுசீர், விறகுதி, உருமுதி எனவும் கண்டு கொள்க. இவையெல்லாம் பாதிரி கணவிரி என்னும் இயற்சீர்ப்பாற்படும். போதுபூ, விறகுதி என்னுமிரண்டன்கட் குற்றுகரம் மேல்வரும் நெடிலோடிணைந்து நிரையாய்ப் பாதிரி கணவிரிபோல நிரையர்மோவெனின்; ஆகா, - அக் குற்றுகரம் நேர்பு நிரைபுமாயேநின்று நேருநிரையு முதலாய் நிரையிறாகிய சீர் தளைகொண்டாங்குத் தட்கும்.! செய்யுள் "நீத்துநீர்ப் பரப்பி னிவந்துசென் மான்றேர்' எனப் போதுபூவும், விறகுதியும் வந்தன. ஆய்வுரை : இதுவும் அது. (இ ள்) நேர்பசை நிரையசைகளின் பின் நேரசை நிற்பின் இயற்சீராம் எ-று. உ-ம். ஆற்றுக்கால், குளத்துக்கால் எனவரும். கரு இயலசை ஈற்றுமுன் உரியசை வரினே நிரையசை இயல ஆகு மென்ப, இாைம்பூரணம்: (இ - ள்.) இயலசைப் பின்னர் உரியசைவரின், நிரையசை வந்தாற்போலக் கொள்க வென்றவாறு. எனவே இவையும் இயற்சீ ரென்றவாறாம். உதாரணம் 'மாங்காடு, களங்காடு, பாங்குரங்கு, கடிகுரங்கு' என வரும்? 1. போதுபூ, விறகுதி என்புழி இடைநின்ற குற்றுகரம் பின்வரும் எழுத்துடன் கூடி நிரையசையாகாது. நீத்துநீர்ப் பரப்பின் நிவந்து செல் மான்றேர் என்புழிப்போல நீத்து, நிவந்து என முன்னுள்ள எழுத்துடன் கூடி முறையே நேர்பும் நிரையும் ஆகியே நிற்கும் என்பதாம். 2. நேர், நிரை யென்னும் இயலசைகளிலொன்றின் பின்னர் நேர்பு, நீரைபு என்னும் உரியசைகளுளொன்று வந்து, நேர்நேர்பு (மாங்காடு), நிரைநேர்பு(களங்காடு) நேர்நிரைபு -(பாய்குரங்கு), நிரைநிரைபு (கடிகுரங்கு) எனவரின் அவை நான்கும் நிரையிற்றியற்சிரே போலக் கொள்ளப்படும்.