பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா க எ 6ýᎢ 6Ꭲ சீரானும் வருதல் உம்மையாற் சீர்நிலை யெய்துமென்றதனாற் பெறுதும். அவை வெண்சீரும் வஞ்சிச்சீருமாம். ஆய்வுரை : இது மேல் எழுத்ததிகாரத்தில் இயற்சீராம் தன்மை பெறும் எனக் கூறிய உயிரளபெடையை அசைநிலையாந் தன்மையும் பெறும் என்றலின் எய்தியதன் மேற் சிறப்புவிதி உணர்த்துகின்றது. (இ - ள்) உயிரளபெடை மேற்கூறிய இயற்சீராந்தன்மையைப் பெற்று வருதலேயன்றி அசையாந் தன்மையைப் பெற்று நிற்றலும் உரித்து எ - று. உ - ம் : 'உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு' என்புழி, உறாஅர்க் என்பது புளிமா' எனச் சீர்நிலை எய்தி அலகு பெற்றும், 'உப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவற் கொப்போநீர் வேலி யுலகு என்புழி உப்போஒ என அசைநிலையெய்தி அலகு பெறாதும் உயிரளபெடை வந்தன. அளபெடைகளெல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொது வாயினவும், செய்யுட்கேயுரியவாகிக் செய்யுள் செய்யும் புலவராற் செய்து கொள்ளப் படுவனவும் என இருவகைப்படும். அவற்றுள் வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயின. இயற்கை யளபெடை எனப்படும். செய்யுட்குப் புலவர் செய்து கொண்ட அளபெடை செயற்கையளபெடை எனப்படும். அவ்விரண்டனுள்ளும் அளபெடை யசைநிலையாகலு முரித்து' எனப்பட்டது இயற்கையளபெடையாகும். செய்யுட்கெனச் செய்து கொள்ளப் பட்ட செயற்கையளபெடை சீர்நிலையெய்தி அலகுபெறும். அதுபோல இயற்கையளபெடை அசைநிலையாகலும் செய்யுட்கே யுரியது என்பது பேராசிரியர் கருத்தாகும். Ꭿ$ 6Ꭲ ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப. இளம்பூரணம் : என்-எனின். ஒற்றளபெடைக் குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.