பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கள கிரி 15, சீர்நிலையெய்தல் பெரும்பான்மையாகலானும் அவை இயற்கை யளபெடையாகியவழி அசையாதல் சிறுபான்மை யென்பது உம் உயிரளபெடை முதற்கணின்ற நெட்டெழுத்துப்போல ஒற்றள பெடை முதற்கணின்ற குற்றெழுத்தும், 'தனிக்குறின் முதலசை மொழிசிதைத் தாகாது” (தொல். செய். 6) என்பதனான் விலக்குண்ணாது விட்டிசையாது முதற்கணின்று நேரசையாமென்பது உங் கூறியவாறு. வல்லெழுத்தாறும் ரகார ழகாரமும் ஒழித்தொழிந்த பதினோரொற்றுங் குறிற்கீழுங் குறிலிணைக்கீழும் அளபெய்திநிற்கும்வழிச் சீர்நிலையாதலேயன்றி அசைநிலையாகலு முரித்துச் சிறுபான்மை யென்றவாறு. அவை, 'கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்” (மலைபடு. 352) என்றவழிக், 'கண்ண்’’ என்பது சீர்நிலையாகித் தேமா வாயிற்று. 'தண்ண்னென’’ என்ற வழித் தட்பத்துச் சிறப்பு உரைத் தற்கு ணகரவொற்றினை அளபேற்றிச் செய்யுள் செய்தான். ஆண்டு அது மாசெல்சுரம் என்னும் வஞ்சியுரிச் சீராவதனை (யாகற்க)ப் பாதிரியென்னுஞ் 1. வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளும் ஒருசொற்கு உறுப்பாய் நின்ற ஒற்று அளபெழுதலும் பின்தோற்றிக் கொள்ளப்பட்ட ஒற்று அளபெழுதலும் என ஒற்றளபெடை இருவகைப்படும். அஃது என் புழி ஆய்தம் சொற்குறுப்பாய்நின்றது, கானவதே எனற்பாலது காணலஃதே' என்புழி ஆய்தம் பின்தோன்றிக் கொண்ட ஒற்றெனப்படும். உயிரளபெடைபோன்றே ஒற்றளபெடையும் தானும் ஒற்றாய் நின்ற எழுத்துங் கூடி அளபெடை மொழியாகிச் சீர்நிலை யெய்தல் பெரும்பான்மை. யென்பதும், அவை இயற்கையளபெடையாயவழி அசைநிலையாதல்சிறுபான்மை யென்பதும், உயிரளபெடையின் முதற்கண் நின்ற நெட்டெழுத்துப் பிரிந்து தனியசையாதல் போலவே ஒற்றளபெடையின் முதற்கண் நின்ற குற்றெழுத்தும் விட்டிசையாத நிலையிலும் தனியசையாம் என்பதும், மெய்களுள் வல்லெழுத்தாறும் ரகாரமும் ழகாரமும் நீங்கலாகவுள்ள ஏனைய மெய்களும் ஆய்தமும் ஆகிய பதினோரெழுத்தும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெடுத்துதிற்கும் என்பதும் அவ்வாறு அளபெய்திநிற்கும் நிலையில் அவை சீர்நிலையாதேலேயன்றிச் சிறுபான்மை அசைநிலையாதலும் உரியவென்பதும் ஒற்றளபெடையும் அற்று' என்னும் மாட்டேற்றால் உணரப்படும்.