பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கள வாழ்க கொண்ட அளபெடை பின்னர் அசைநிலையாதற்கு என்னை காரணமென மறுக்க. மற்று ‘அளபெடை யசைநிவை யாகலு முரித்தே' (தொல், செய். 17) என வரையாது கூறவே இச் சூத்திரமும் அடங்குமாகவின் இது மிகையாம்பிறவெனின், அற்றன்று; எழுத்தோத்தினுள் ஒற்றள பெடுக்குமென்பது கூறாமையின் வேறு கூறினான். அல்லதுாஉம் உயிரளபெடையின் வேறுபட்டதோர் இலக்கணமுடைமையின் இதனை வேறு கூறினானென்பது. என்னை ? "பனா அட்டு’ என்றவழி உயிரளபெடை கடியாறு என்னுஞ் சீராயவாறுபோ லாகாது, 'கொங்ங்கு குரங்ங்கு எஃஃகு மின்ன்னு” என அளபெழுந்த இருவகை யுகர வீற்றுச் சொற்கள் போரேறு கடியாறு என்னுஞ் சீரானும் ஞாயிறு வலியது என்னுஞ் சீரானு மாகாது இருவகை உகரமொடு இயைபின்றி வருதலானும் அவை வண்டு வரகு எனவும் உரியசைச்சீர்ப்பாற்பட்டு அசையாகு மாதலானும் இருவகை யுகரமோடியையாதவழிக். 'கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் (மலைபடு. 352) எனவுங், “கஃஃ றென்னுங் கல்ல தர்' எனவுஞ் சீர்நிலை பெறுதலானுமென்பது. எனவே, இயற்கையுயி ரளபெடைபோலச் செயற்கை யொற்றளபெடையும் ஒரோவழி ஒசை சிதைக்கப்படாதாயிற்று. இதனானே உயிரளபெடை போல ஒற்றளபெடை வருகின்ற எழுத்தோடு கூடி அசையாகா தென்பதாம். ஈர்க்கு பீர்க்கு என ஈரொற்று நின்றவழி வேறோ ரசை யாகாதவாறுபோல ஒற்றளபெடையும் ஒரோவழி அசை நிலை பெறாதென்பது உங் கூறினானாம். இனி, இயற்கை யொற்றளபெடை சிறுபான்மை வருமாத லின், இஃது அசைநிலையாதலே பெரும்பான்மையாதனோக்கி