பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மாட்டெறிந்தான் எனவும் அமையுமெனக் கொள்க.1 (கஅ) நச்சினார்க் கிளிையம் இஃது ஒற்றளபெடையும் சீர்நிலையாதலேயன்றி அசை நிலையுமாமென எய்தாததெய்துவித்தது. இ~ள். ஒற்......மொழிப எ-து ஒற்றளபெடுத்தாலும் உயிரளபெடைபோலச் சீர்நிலையெய்தலும் ஒரசையாய் நிற்றலுமுரித்து. எ.று. ஒற்றெனவே, ங் ஞ ண ந ம ன வ ய ல ள வாய்தம்’ என்னும் பதினோரொற்றுங் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெடுத்தல் பெறுதும்.2 மங்ங்கலம் எனவும் அரங்ங்கம் எனவும் வரும். ஏனையவற்றோடும் ஒட்டுக. சீராமெனவே, ஈரசைச்சீரும் மூவசைச்சீருமாதல் பெறுதும். மேல் மூவகைச்சீர் கூறுதலின் இதனை ஈண்டு வைத்தார். ஒரசையாதல் சிறுபான்மை. உ-ம். கண்ண் தண்ண்ணெனக் கண்டும்கேட்டும்’ என்புழிக் கண்ண்ணென்பது சீர்நிலையெய்தித் தேமாவாயிற்று. தண்ண்ணென என்றவழித் தட்பத்திற் சிறப்புக் கூறுதற்காக இயற்சீர்க்கண் ணகர. வொற்றினை மிகக்கொடுத்து அளபெடுத்துச் செய்யுள் செய்தான். அது, மாசெல்சுரம் என்னும் வஞ்சிச்சீராவதனை ஆகற்க. பாதிரி என முன்னின்ற இயற்சிரேயாக என வழுவமைத்தவாறு. 1. எழுத்ததிகாரத்துள் ஒற்று அளபெடுக்கும் என்று கூறாமையால், 'அளபெடை யசைநிலை .ாகலுமுரித்தே' என்புழி இச்சூத்திரம் அடங்காது. அன்றியும் இவ்வொற்றளபெடை முற்குறித்த உயிரளபெடையின் வேறுபட்டதோர் இலக்கணமுடையது. பனாஅட்டு என வரும் உயிரளபெடையில் முன்னுள்ள நெடிலும் குறிலும் வேறுபிரிந்தும் முன்னும்பின்னுமுள்ளவற்றோடு இயைந்து அலகிடப்படுமாறு போலன்றிக் கொங்ங்கு, குரங்ங்கு, என அளபெடையாய் வரும். ஒற்றுக்களிரண்டும் இணைந்து இருவகையுகரமோடியைபின்றித் தனித்து ஒரசையாய் அலகிடப்படுதலும் அவையே அசைநிலையாகும்வழி வண்டு குரங்கு என உரியசைச்சீர்ப்பாற் பட்டுவருதலும் ஆகிய வேறுபாடுடையது ஒற்றளபெடை யாகும். எனவே உயிரளபெடை போல வருகின்ற எழுத்தொடு கூடி ஒற்றளபெடை அசையாகாதென்பதும் ஈர்க்கு பீர்க்கு என்புழி இரண்டொற்றுக்கள் இணைந்து நின்றவழியும் அவை அசையாகாதவாறுபோல ஒற்றளபெடையும் ஒரோவிடங்களில் அசையாம்நிலைமை பெறாது வருதலும் உண்டென்பதும் ஒற்றளபெடை சிறுபான்மையாதலின் ஒற்றளபெடை அலகுபெறாமையும் நோக்கி 'ஒற்றளபெடையும் அற்று' என மாட்டெறிந்தார் ஆசிரியர் என்பதாம். 2 வளுனை நபன வயலள ஆய்தம் அள11 ம் குறிலினை குறிற்கீழ் இடைகடை' என்பது நன்னூல்.