பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் 'அம்பொரைந் துடைய்ய காம னைய்ய னென்ன வந்தனன் அம்புநீர ரல்ல்ர் நன்கு ரங்கு நீரராயினும் தங்கு ரவ்வர் தாங்கொடுப்பி னெஞ்சு நொந்து தாழ்வர்தாம் பொங்க ரவ்வ வல்குவாரெ ணப்பு கன்று சொல்லினான்’ (சீவக சுரமஞ்-3) இதனுள் யகர வகரவொற்றில்வழி ஓசை அவ்வொற்றையுண்டாக் கிற்று. அஃது அளபெடுத்தது வந்துழிக் காண்க. ஆய்வுரை: இஃது எய்தாதது எய்துவித்தது. (இ - ள்) ஒற்று அளபெடுத்துவரினும் முற்கூறிய உயிரளபெடை போன்று சீர்நிலையெய்தி அலகு பெறுதலேயன்றி அசைநிலையாகி அலகு பெறாமையும் உரித்து எ று. 'ஒற்று அளபெடுப்பினும்’ எனவே உயிரெழுத்தினைப் போன்று ஒற்றுக்களும் அளபெடுத்து நிற்றற்குரியன என்பதும் அங்ங்ணம் ஒற்றெடுத்து அளபெடுத்து வருங்கால் உயிரளபெடை போன்று சீர்நிலையெய்தி அலகு பெறுதலும் அசைநிலையாகி அலகு பெறாமையும் ஆகிய இருநிலைமையும் ஒருங்குபெறும் என்பதும் பெற்றாம். 'கண்ண் தண்ண்னெனக் கண்டும் கேட்டும்’ என்புழி முதற்கண் நின்ற சீராகிய கண்ண் என்பது சீர்நிலையெய்தித் தேமா ஆயிற்று. அதனையடுத்து வந்த தண்ண்ணென. என்னும் இரண்டாஞ் சீர்க்கண் உள்ள ணகரவொற்று செய்யுளோசையினை நிறைத்தற்கன்றித் தட்பத்தின் மிகுதியினைப் புலப்படுத்தும் நிலையில் இயற்சீர்க்கண் அளபெடுத்து நின்றதாதலின் அசைநிலையாய் அலகுபெறாதாயிற்று, தண்ண்ணென’ என்பது சீர்நிலையெய்தி வருமாயின் 'மாசெல்சுரம்' என வஞ்சிச் சீராகும். இங்கு அன்சைநிலை யாய் வந்தமையின் பாதிரி’ என இயற்சீராயிற்று. கஅ இயற்சீர் இறுதிமுன் நேர்வண் நிற்பின் உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப. இளம்பூரணம் : என்- எனின். வெண்பாவுரிச்சீர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று.