பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம்.சு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இதனுட் காமன்காண்’ எனவும், கருவூரார்' எனவும், 'இருகுடங்கை எனவும், யானெதிரே எனவும் நான்கு வெண் சீரும் வந்தன. இதுவும் ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெற்ற பெயர்; வெண்பாவிற்கும் அதன் பகுதியாகிய கலிப்பா விற்கும் உரிமையாதலிற் குணங் காரணமாயிற்று. ஆட்சி, 'வெண்பா வுரிச்சி ராசிரிய வுரிச்சி ரின் பா நேரடிக் கொருங்குநிலை யிலவே' (தொல். செய், 23) எனவும் பிறாண்டும் ஆளுமென்பது. மற்று இயற்சீரென்றவழிப் பத்து இயற்சீருங் கொள்ளாமோவெனின், அதற்கு விடை முன்னர், "இயலசை மயக்கம்” (தொல், செய். 13) என்புழிச் சொல்லிப்போந்தாம். இயற்சீர் எனப் பொதுவகையான் ஒதியவழி இயற்சீர் பத்துங் கொள்ளாது இயலசை மயக்கமாகிய நான்கனையுங் கோடலும் ஆசிரியவுரிச்சீரென்று பொதுவகையான் ஒதியவழி ஆறனையுங் கொள்ளாது உரியசை மயக்கமாகிய நான்கனையுமே கோடலும்? வேண்டினானென்பது. அஃது இச்சூத் திரத்தானும்,: "வெண்பா வுரிச்சி ராசிரிய வுரிச்சீர்” (தொல், செய். 23) என்பதனானும் பெறுதும். (க.கூ) நச்சினார்க் திணியம்: இது முறையானே மூவசைச் சீருணர்த்துதறொடங்கி, அவற்றுள் வெண்பாவுரிச்சீர் உணர்த்துகின்றார். 1. இயலசைமயக்கமாகிய இயற்சீர்நான்காவன: நேர் தேர், (தேமா) நிரைநேர் (புளிமா), நேர்நிரை (பாதிரி) நிரைநிரை (கணவிரி) என்னும் ஈரசைச் சீர்கள் நான்குமாம். 2. உ.சியசைமயக்கமாகிய ஆசிரியவுரிச்சீர் நான்காவன : நேர்பு நேர்பு (வீடுபேறு), நிரை புநேர்பு (வரகுசோறு), நேர்புநிரைபு (பாறுகுருகு), திரைபு நிரைபு (தடவுமருது) என்னும் ஈரசைச்சீர்கள் நான்குமாம். 3. இச்சூத்திரம் என்றது, இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை உரியசை மயக்கம் ஆசிரியவுரிச்சீர் (செய்-யE. ) என முற்கூறிய சூத்திரத்தினை