பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக 钴 堡。姬。 தாடோய் தடக்கை மல்ல னாடுகெழு திருவிற் பீடுகெழு வேந்தே" இதனுள் நிரையீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும் வந்தன. 'வான்பொய்யாது தீம்பெயல்பெய்து மால்யாறுபோந்து கால் சுரந்துபாய்ந்து சுரைபொய்யாது நிறைவளஞ்சான்று வரையாதுதந்து பலாப்பழுத்துவீழ்ந்து பாம்புகொள்ளாது வீங்குசுடர் நீண்டு வித்து நாறுவாய்த்து முத்துக்கரும்புபூத்து வரம்புகொள்ளாது நிரம்புபெருங்கூட்டு விசும்பு நீங்குமஞ்சு துயின்றுபெயர்ந்துபோந்து வாழை யோங்கிய கோழிலைப் பரக்குந் தண்டா யாணர்த் தென்ப வென்றும் படுவது கூட்டுண்டு கடவது நோக்கிக் குடிபுறந் தரூஉம் வேந்த னெடுநிலைத் தண்குடை நிழற்று நாடே' இதனுள் நேர்பசை யிறுதியாகிய வஞ்சியுரிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. "சீற்றமிகுபு செல்சினஞ்சிறந்து கூற்றொத்துவிரைபு கோள்குறித்துமுயன்று புலிப்போத்துலவு பொலங்கொடியெடுத்துப் புகலேற்றுமலைந்து பகையரசுதொலைத்து வேம்புமீதணிபு போந்துபடத்தொடுத்து வீற்றுவிற்றுப் புணர்ந்து வேற்றுச்சுரும்புகிளர்ந்து களிறுகால்கிளர்ந்து குளிறுகுரல்படைத்துச் சொரிந்துதுரங்குகடாத்து விரவுப்பலவுதொலைத்து மணங்கம ழாரமொடு தயங்கச் சூடிய வென்வேற் சென்னி பொன்னியற் புனைகழல் பாடுபெறு பாணினும் பலவே பாடா தோடிய நாடுகெழு வேந்தே' இதனுள், நிரைபீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. (உ.ம்) நச்சினார்க்கினியம் இஃது ஒழிந்த மூவசைச்சீர் கூறுகின்றது.