பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக &T 32-6 T தோங்குசென்னிலை வாங்குகதிர்தரீஇப் போதுதுரங்குசிலை மீது புகுந்துபுகுந் தொடுங்குசெய்தொழில் வழங்குகிளிக்குழாந் திருந்துகோட்டுமிசைக் குரங்குவிருந்துகொளு நன்னர் நன்னாட் டென்னா குங்கொல் பொன்னிநன் னாட்டுப் பொருந னெங்கோன் தாடோய் தடக்கை மல்ல னாடுகெழு திருவிற் பீடுகெழு வேந்தே' இதனுள் நிரையீற்று வஞ்சிச்சீர் பதினாறும் வந்தன. 'வான்பொய்யாது தீம்பெயல்பெய்து மால்யாறுபேர்ந்து கால்சுரந்துபாய்ந்து சுரைபொய்யாது நிரை வளஞ்சான்று வரையாதுதந்து பலாப்பழுத்து வீழ்ந்து பாம்புகொள்ளாது வீங்குசுடர்நீண்டு வித்துநாறுவாய்த்து முத்துக்கரும்புபூத்து வரம்புகொள்ளாது நிரம்புபெருங்கூட்டு விசும்புநீங்குமஞ்சு துயின்றுபெயர்ந்துபேர்ந்து வாழை யோங்கிய கோழிலைப் பரக்குந் தண்டா யாணர்த் தென்ப வென்றும் படுவது கூட்டுண்டு கடவது நோக்கிக் குடிபுறந் தரூஉம் வேந்த னெடுநிலைத் தண்குடை நிழற்று நாடே' இதனுள் நேர்பிறாகிய வஞ்சிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. "சீற்றம்மிகுபு செல்சினஞ்சிறந்து கூற்றொத்துவிரைபு கோள்குறித்துமுயன்று புலிப்போத்துலவும் பொலங்கொடியெடுத்துப் புகலேற்றுமலைந்து பகையரசு தொலைத்து வேம்பு மீதணிபு போந்துபடத்தொடுத்து வீற்றுவீற்றுப்புனைந்து வேற்றுச்சுரும்புகிளர்பு களிறுகால்கிளர்ந்து குளிறுகுரல்படைத்துச் சொரித்துதுரங்குகடாந்து விரைந்துமலைந்துதொலைத்து மணங்கம ழாரமொடு தயங்கச் சூடிய வென்வேற் சென்னி பொன்னியற் புனைகழல் பாடுபெறு பாணினும் பலவே