பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9H தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம்لسي__2ئ 6HT பாடா தோடிய நாடுகெழு வேந்தே' இதனுள் நிரைபீற்று வஞ்சிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. ஆய்வுரை: இது, வஞ்சியுரிச் சீராமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்குறித்த வெண்பாவுரிச் சீர் நான்குமல்லாத ஏனைய மூவசைச்சீர் அறுபதும் வஞ்சியுரிச்சீர் எனப்படும் எ-று. அறுபது வஞ்சிச் சீர்களுக்கும் உரியவாக இளம்பூரணர், பேராசிரியர் உரைகளில் தனித்தனி வாய்பாடுகள் காட்டப்பெற்றுள்ளன. உ.ம். தன்பா அல்வழித் தான்நடை இன்றே. இளம்பூரணம் : என்-எனின். வஞ்சியுரிச்சீர்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வஞ்சியுரிச்சீர் வஞ்சிப்பாவினு ளல்லது நடை பெறாது என்றவாறு.1 (2_O) Guy treforful, uit : இஃது, அவற்றைப் பாவிற்குரிமை கூறுகின்றது. (இ - ள்.) இவ்வறுபது வஞ்சியுரிச்சீருந் தன்பாவினு ளல்லாத ஆசிரியம் வெண்பாக் கலியினுள் வாரா (எ - று). சிறுபான்மையா னாவன முன்னர்ச் சொல்லுதும், இவை ஆசிரியவுரிச்சீர் தூங்கலோசையா னாகுமாறுபோல ஆசிரிய வோசையும் ஆக்குங்கொல்லெனின் ஆக்காவென்பது இதனது பயன்.2 (உக) 1. மேற்குறித்த வஞ்சியுரிச்சீர் அறுபதும் வஞ்சிப்பாவினுளல்லது ஆசிரியம், வெண்பா, கலிப்பா ஆகிய ஏனைய பாக்களில் நடைபெறுதல் இல்லை. 2. வஞ்சியுரிச்சீர்’ எனவே இவை வஞ்சிப்பாவுக்கே சிறப்புரிமையுடையன என்பது பெறப்படுமாயினும் ஆசிரியவுரிச்சீர் ஆசிரியப்பாவினுட் பயிலுதலோடு வஞ்சிப்பாவிலும் வந்து தாங்கலோசையினை ஆக்குமாறுபோன்று இவ்வஞ்சியுரிச் சீர்களும் ஆசிரியத்துள்வந்து அகவலோசையினை ஆக்குமோ என ஐயுற்ற மாணாக்கர்க்கு இவ்வஞ்சியுரிச்சீர்கள் வஞ்சிப் பாவினுளல்லது ஏனைய ஆசிரியம், வெண்பாக் கலிப்பாவினுள் வந்து அவற்றின் ஒசையினை ஆக்கமாட்டா என ஐயம் அகற்றும் முறையில் தன்பா அல்வழித் தான்நடை யின்றே என்றார் ஆசிரியர்.