பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&T II. Q.- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எஞ்சிய உரிய என்றார் தொல்காப்பியனார். எஞ்சிய' என்றது, ஒரு பாவுக்குச் சிறப்புரிமையுடையனவாகப் பெயர் பெற்ற ஆசிரியவுரிச்சீர், வெண்பாவுரிச்சீர், வஞ்சியுரிச்சீர் என்னும் மூவசைச் சீர்களுள் வஞ்சியுரிச்சீரல்லாத ஏனையிரண்டினையும். @一恕一 வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் இன்ப நேரடிக் கொருங்குநிலை இலவே. இளம்பூரணம் : என்-எனின் வெண்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்.) வெண்பாவுரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் வெண் பாவினது நேரடிக்கண் ஒருங்கு நிற்றவில்லை என்றவாறு. (உ.உ) பேராசிரியம் : இது, கட்டளையாசிரியப்பாவினுள் அடியுறழப்படாத சீர் இவையென்கின்றது. (இ - ள்.) வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஆசிரியப்பாவிற்கு ஒப்ப வரும் நிலை இல. (எ-று). ‘இன்டா நேரடி யென்பது ஆசிரியவடி யென்றவாறு.2 ஒருங்கு’ என்றதனான் இயற்சீராகிய தன்சீரேபோல வெண் சீரும் வாராதென்பதாம். இயலசை மயங்கினவே இயற்சிரெனப் படுவன எனவும், உரியசை மயங்கினவே ஆசிரியவுரிச்சீரெனப் படுவன எனவும் முன்னர்ச் சொல்லிப் போந்தானாகலின் ஈண்டு உ ரி ய ைச மயக்கத்தினையே ஆசிரியவுரிச்சீரென் 1. இச்சூத்திரத்தில், இன் பா என்றது. வெண்பா எனக்கொண்டார் இளம்பூரணர். அவர் கருத்துப்படி வெண்பாவின் நேரடியாகிய நாற்சீரடிக்கண் வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் அடுத்தடுத்து ஒருசேர நிற்றல் இல்லை. யெனவே வெண்பாவுரிச்சீரல்லாத இயற்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஒருசேரதிற்றல் உண்டோ என ஐயுறுதற்கும் இடனுண்டாகின்றது. வெண்பாவின்கண் இயற்சீரும் வெண்சீருமல்லாத ஏனைச்சீரும் அடியும் மயங் குதல் இலக்கணமன்றாதலின் இங்கு இன்பாநேரடி யென்றது. ஆசிரிய அடியை எனப் பேராசிரியர் முதலியோர் கூறிய பொருளே இங்குப் பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. 2. இங்கு இன்பாநேரடி என்றது, நாற்சீரடியினையே எழுத்தெண்ணிக் குறளடி முதல் கழிநெடிலடி வரை ஐவகையடிகளாகப் பகுத்தெண்ணிக் கொள்ளப் so :۱ : " جی، و :- - ~. - - - - பறும் கட்டளையாசிரியப்பாவின் அடியினை என்பது பேராசிரியர் கருத்தாகும்.