பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி இ. சின் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் மென மறுக்க!, மற்றுக் கலித்தளை மருங்கின் வெண்சீர் வருக வென்னாரோ வெனின், அது சொல்ல வேண்டுமோ ? ஆசிரியத்துத் தன்சீர் வாராதன கூறுவதன்றி வருமென்பது கூறான், வெண்பாவிற்கும் அவ்வாறே வெண்சீர் வருமென விதந்தோதான், அதுபோல அதனியற்றாகிய கலிப்பாவிற்கும் வெண்சீர் வருமென விதந்தோதல் வேண்டுவதன்று 2 வஞ்சிப்பாவிற்குப் போல வேறு சீரின்மையினென்பது அஃதேல், 'வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய’ (தொல் செய்-22) என வஞ்சிப்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் வருமென்று கூறல் வேண்டாவெனின் வேண்டுமன்றே, வெண்சீர் வருமென விதந் தோதுவான் ஆசிரியவுரிச்சீர் ஆண்டு விலக்குண்ணுமாகலி னென்பது.8 அவற்றுக்குச் செய்யுள் : "ஓங்குவரை யடுக்கம்பாய்ந் துயிர்செகுக்குந் துறைவகேள்’ “விளங்குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல் விளை. யாடி’ என இவை நிரையிற்றாசிரியவுரிச்சீர் கலிப்பாவினுள் வந்தன. நிறைரயீற் றாசிரியவுரிச்சீர் கலிப்பாவினுள் வந்தன. எனவும், 'வஞ்சியே னென்றவன்ற னுாருரைத்தான் யானவனை’’ (யா-ப-330) எனவும், 1. கவித்தனைமருங்கின்' என்பது கலியோசைபடச் சீர்கள் தம்முள் தளைத்தற்கண் என வினைசெய்யிடமாகிய தொழில் நிகழ்ச்சிக்கண் ஏழாம் வேற்றுமை வந்தது. தளைமருங்கு என்பதனைத் தளைத்தற்கண் எனத்தொழி. லிடமாகக் கொள்ளாக்கால், இருசீரானாகிய தளையிடமாகப் பிறிதொரு சீர் ஆண்டுவரும் எனத் தவறாகக் கொள்ளவேண்டிய நிலையேற்படும் என்பதாம். 2. ஆசிரியத்தும் வெண்பாவிலும் அவ்வப்பாவுக்குரிய தன்சீர் வருமெனக் கூறவேண்டியதில்லை. அதுபோன்றே வெண்பாவியற்றாகிய கலிப்பாவின்கண் வெண் சீர்வரும் என விதந்து கூறவேண்டிய இன்றியமையாமையில்லை என்பதாம். 3. ஆசிரியவியல்பினதாகிய வஞ்சிப்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் வருமெனக் கூறவேண்டிய இன்றியமையாமையில்லையாயினும் வஞ்சிப்பாவின் கண் ஆசிரியவுரிச்சிரேயன்றிப் பிற சீரும் கலத்தலுண்மையின் அங்கு வெண்சீர் வருமென எடுத்தோதின் ஆசிரியவுரிச்சீர் விலக்குண்ணும். அதுபற்றியே வஞ்சிமருங்கின் எஞ்சியவுரிய (செய், 22) என ஆசிரியவுரிச் சீரும் சேர்த்தோதினார் ஆசிரியர்.