பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#f || ...9 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் எனவரும் இவ்வாறு கூறவே, சீர் வகைக் கலியடிக்கு இவை யொழிந்த ஆசிரியவுரிச்சீர்களும் ஏனைச்சீர்களும் வேண்டியவாறு வரப்பெறுமாயிற்று. -త్తి 1కి? శౌ : - இது, கலிப்பாவிற் சீர் மயங்குமாறு கூறுகின்றது. (இ.ஸ்) கவித்தளையடியின்கண் மேற்குறித்த இருவகைச் சீரும் ஒருங்கு நிற்கவும் பெறும் எ-று. ஆசிரியத்திற் கடியப்படாம்ையேயன்றிக் கலிப்பாவிலும் கடியவும் படா என்றமையின் கடியவும் என்புழி உம்மை இறந்தது தழி இய எச்சவும்மையாகும். தளையென்று ஒதுவன. வெல்லாம் எழுத்தெண்ணிச் சீர் வகுக்கப் பெறும் கட்டளையடியினையே குறிக்கும் என்பர் பேராசிரியர், உச கவித்தனை படிவயின் நேரீற் றியற்சீர் திவைக்குரித் தன்றே தரிபு மோர்க்கே. இனம் பூரணம் : என் - எனின். இதுவுமது. (இ - ள் ) கலிப்பாவிற்குரிய கலித்தளைக்கண் நேரீற்றியற் சீர் நிற்றற்குரித் தன்று ஆராய்வார்க் கென்றவாறு.1 (உச) G a r y m stifta i tip : இதுவுங் கட்டளையடிக்கு எண்ணப்பட்டதொரு சீர்வரை யறை. (இ - ள் ) கலித்தளை அடிவயின்-கலிப்பாவினது கட்டளை படிக்கண் ; நேரீற்றியற்சீர் நிலைக்கு உரித்தன்று - தேமா புளிமா என்னும் இரண்டியற்சீரும் வரப்பெறா; தெரியு மோர்க்கே-துள்ளலோசையைத் தெளிவார்க்கு (எ . று). ஆகாவென்றவற்றைக் காட்டலாவதில்லை; ஆகாவென்பதல் லது. கட்டளையடிக்கண் வரைந்தோதவே, அல்லனவற்றுக்கண் வருமென்பதாம் ? அவை : 1. கலிப்பாவின் ஒசையை ஆராய்வார்க்குத் தேமா, புளிமா என்னும் ற்றி நேரிற்றியற்கீர் கலிப்பாவடியில் நிற்றற்குரியதன்று என்பது நன்கு புலனாம். 2. தேமா, புளிமா என்னும் நேரீற்றியற்சீர் இரண்டும் கவிப்பாவினது கட்டளையடிக்கண்வாரா என ஆசிரியர் வரையறுத்துக் கூறுதலால், கலிப்பாவின் சீர்வ கையடிக்கண் அவ்விருசீரும் அருகி வருதலுண்டு என்பதாம்.