பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ சம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் (இ-ன்.) கலித்தளையானாய கலிப்பாவில் வரும் நேரடியிடத்துத் தேமா புளிமா என்னும் நேரீற்றியற்சீரிரண்டும் நிற்றற்குரித்தன்று, துள்ளலோசையைத் தெரிவோர்க்கு. எ-று. இங்ங்ணம் வரைந்தோதவே, சீர் வகையடிக்கண் இவ்விரண்டியற்சீரும் வருதல் பெறுதும். உ-ம். ஐயிரு தலையி னரக்கர் கோமான்’ எனவரும். எனவே, நேரீற்றியற்சீர் ஒழிந்த எட்டியற்சீரும் கலிக்கு வருதலும் ஆசிரியத்திற்கும் வெண்பாவிற்கும் ஒழிந்த பத்தியற். சீரும் வருதலும் பெற்றாம். ஆய்வுரை : இது, கலியடிக்கு எண்ணப்படாததோர் சீர்வரையறை கூறுகின்றது. (இ ள்) கலித்தளையானாகிய கலிப்பாவில் வரும் நேரடியின்கண் நேரிற்றியற்சீர் நிற்றற்குரியதன்று; (துள்ளலோசையினைத்) தெரிந்துணர்வார்க்கு எ-று. நேரீற்றியற்சீராவன தேமா, புளிமா என்பன. உரு வஞ்சி மருங்கினும் இறுதி நில்லாது.2 இாைம்பூரணம் : என்-எனின். வஞ்சிக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்.) வஞ்சிப்பாவினும் அடியினிற்றின்கண் நில்லாது நேரீற்றியற்சீர் என்றவாறு. எனவே, அடிமுதற்கண் நிற்கப் பெறும் என்றவாறாம். 1. தளை யென்று ஒதுவனவெல்லாம் எழுத்தெண்ணி வகுக்கப்பெறும் கட்டளையடியாகிய நாற்சீரடியையே குறிக்கும் என்பது பேராசிரியர் கருத்தாகும். இக்கருத்தினையே நச்சினார்க்கினியரும் ஏற்றுக்கொண்டுள்ளாராதலின் 'கலித்தளையடி’ என்பதற்குக் கலித் தளையானாய கலிப்பாவில் வரும் நேரடி' எனப் பொருள் வரைத் துள்ளார் . 2. நில்லா என்பது பேராசிரியருரையிற் கண்ட பாடம். 2 வஞ்சி மருங்கினும் தேரீற்றியற்சீர் இறுதிநில்லாது' என நேரீற்றியற்சீர் என்பதனை அதிகாரத்தால் வருவித்துரைக்க. 3. இறுதி' என்றது. அடியின் ஈற்றினை அடியின் ஈற்றின்கண் நில்லாது எனவே அடிமுதற்கண் நிற்கப்பெறும் எனக் கொள்வர் இளம்பூரணர்,