பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟒拿、2_ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் இனி, ஈற்றுக்கண் வருதல் சிறுபான்மை யென்பாரும், யாண்டும் இறுதிக்கண் வாராவென்பாரும் இச்சூத்திரத்தை யுரைக்குமாறு வஞ்சியடியிறுதிக்கண் இவை வாராவெனப் பெரும்பான்மைபற்றி ஒதினானெனவும், இஃதொருதலையாக விலக்கினானெனவுஞ் சொல்லுப. அவ்வாறு கூறின் முதற்கண் அவ்விருசீரும் வருதல் பெரும்பான்மையாதல் வேண்டுமென மறுக்க என்றார்க்குத், 'தன்பால் வெங்கள்ளி னொலிவே விலங்குதடக்கை' எனவும், “புன்காற் புனர் மருதின் போதப்பிய புனற்றாமரை” எனவுந், தேன்றாட் டிங்கரும்பின்' எனவும் வந்தனவாலெனின், அங்ங்ணம் நலிந்து காட்டினவை அளபெடை வெண்சீராம்; அது செவிகருவியாக உணர்க. என்னை ? "கொற்றக் கொடியுயரிய” என அளபெழாதவழித் துங்காமையின்: அல்லதுாஉம், நேரிற் றியற் சீர் இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை யெனப்படும்; “மண்டினிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயுந் திமுரணிய நீரும்” எனவும், (புறம்-2) 1. இச்சூத்திரத்தில் உள்ள இறுதிநில்லா என்னுந்தொடர்க்கு, வஞ்சியடி யிறு இக்கண் நேறிற்றியற்சீர் இாண்டும் வாராவெனப்பெரும்பான்மைபற்றி ஒதினாாாதலின் ஈற்றுக்கண்வருதல் சிறுபான்மையென்பாரும், பாண்டும் இறுதிக்கண் வாரா என ஒரு தலையாக விலக்கினாரெனப் பொருள் கொள்வாருமுளர். அவ்வாறு பொருள் கொள்ளின் நேரீற்றியற் சீராகிய அவையிரண்டும் முதற்கண். வருதல் பெரும்பான்மையாதல் வேண்டும். அங்கனம் வாராமையின் அவர்களும் பொருள்கள் பொருந்தா என மறுக்க என்பதாம்.