பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உரு எசரு என ஈற்றுக்கண் வருதல் பெரும்பான்மையாதலின் இறுதி நில்லா எனப் பொருள் கூறலாகாமை யுணர்க. மருங்கு என்றதனான் நேர்நிலைவஞ்சிக்கே இவ்வரையறை: வியனிலை வஞ்சிக்கு இன்றென உணர்க. ஆய்வுரை : இது, வஞ்சிக்குரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ஸ்) முற்கூறிய நேரீற்றியற்சீர் இரண்டும் அடியின் ஈற்றின்கண் நில்லா எ-று. 'இறுதிநில்லாது என்பதற்கு அடியிற்றின்கண் நில்லாது” எனப் பொருள் வரைந்து, எனவே அடிமுதற்கண் நிற்கப்பெறும் என்றவாறாம் என விளக்கம் தந்தார் இளம்பூரணர். ‘மண்டினிந்த நிலனும் நிலனேந்திய விகம்பும் (புறம்-2) எனவரும் புறப்பாடலில் நேரீற்றியற்சீர் அடியிறுதிக்கண் பெரும்பான்மையும் பயின்றுவரக் காணுதலால் இச்சூத்திரத்துக்கு இளம்பூரணர் கூறும் பொருள் பொருந்தாதெனவுணர்ந்த பேராசிரியர், இறுதி நில்லா’ என்பதற்கு, இறுதற்றொழிலாகிய துரங்கலோசைப்பட அடிமுதற்கண் வாரா எனப் பொருள் கொண்டு, "கொற்றக் கொடியுயரிய' எனவும், 'களிறுங் கதவெறிந்தன. எனவும் நேரீற்றியசீர் அடிமுதற்கண் துரங்கலோசைப்பட வாரா பின எனவும் ‘அகல்வயல் மலைவேலி நிலவுமணல் வியன்கானல்’ என நேரிற் றியற்சீரல்லாத பிற சீர்கள் அடிமுதற்கண் துரங்கலோசைப்பட வந்தன எனவும் உதாரணங்காட்டி விளக்கினார். இருசீரான்வரும் குறளடிவஞ்சிப்பாவிற்கே இவ்வரையறை கொள்ளப்படும் என்பதும் முச்சீரான் வரும் வஞ்சிக்கு இத்தகைய வரையறையில்லை யென்பதும் பேராசிரியர் கருத்தாகும்: