பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ki #F^ EFsr தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இசைநிலை நிறைய நிற்குவ தாயின்1 அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே. இளம்பூரணம் : என்-எனின். ஓரசைச்சீ ராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இன்) இசை நிற்கின்றநிலை நிரம்பா நிற்குமாயின் அசையும் சீராந் தன்மைபோல2 வரையார் ஆசிரியர் என்றவாறு, உதாரணம் ‘தாள், மலர், காசு, பிறப்பு' என வரும், பேராசிரியம் : இது, நான்கசையுஞ் சீராகும் இடனுமுடைய என்கின்றது. (இ - ள்.) ஒசை நிலைமையாற் சீர்த்தன்மைபட நிறைந்து நிற்குமாயின் அசைநிலைமைப்பட்ட சொற்களையெல்லாம் சீர்நிலை பெறுதற்கண் வரை யார் (எ-று). “கழறொழா மன்னவர்தங் கை’ என்று நேரசை சீராயிற்று. 'புனனாடன் பேரே வரும்’ என நிரையசை சீராயிற்று. 'எய்போற் கிடந்தானென் னேறு” (புறப்-வெண்பாமாலை-வாகை. 22) என நேர்பசை சீராயிற்று. 'மேவாரை யட்ட களத்து' (களவழி-25,27,36) என நிரைபசை சீராயிற்று, பிறவுமன்ன. இவற்றை உண்மை வகையாற் சீராமென்றான் அல்லன்: 'தொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல” (தொல், எழுத்-மொழி, 17) 1. நிற்குபவாயின்' என்பது பேராசிரியருரையிற்கண்ட பாடம், அசை நிலை இசைநிலை நிறைய நிற்குவதாயின் சீர்நிலைபெறல் இயைத்துப் பொருள்கொள்க. வரை யார் என 2. அசையும் ரோத்தன்மைபோல வரையார்' எனவரும் இவ்வுரைத் தொடர், அசையும் சீராந்தன்மைபெறல் வரையார்' என்றிருத்தல் பொருட் பொருத்தமுடையதாகும்.