பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈருய் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் தன்மை நோக்கியே இயற்சீர்ப்பாற்படுத்து இயற்றுகவென அடங்கக்கூறிற்றென அறிவித்தற் கெனவுணர்க.1 எனவே, என் சொல்லப்பட்டதாம் ? இவ்வுரியசையிரண்டுஞ் சீர்வகையான் வேறு வேறு எண்ணித் தொகைபெற்றுத் தமக்கு ஒதிய அடியுறழுமெனவும், அஃதெண்ணப்பட்ட தளைவகை நோக்குங்கால் வேறுவேறு எண்ணுத் தொகை பெற்று இயற்சி ரெனவேயடங்குமெனவுங் கூறப்பட்டதாம்; இன்னுந் தளை வகைக் கண்ணெனவே, கட்டளையடிக்கண்ணதே இவ்வரையறை யென்பது உம் அல்லாதவழி இந்நான்கசையும் வரையறை. யின்மையின் தளை கொள்ளப்படாதென்பது உங் கூறப்பட்டதாம். அஃது ஒரசைச் சீரல்லாத சீராயின் கட்டளையடியல் வழியுந் தளை கொள்பவோ வெனின், தளைகொள்ளிற் கட்டளையடி யெனப்படு மாதலின் அல்லாதவழி வந்தசீர் தளைகொண்டன. வென்றல் பயனில் கூற்றாமென மறுக்க.2 'உலக முவப்ப வலனேர்பு திரிதரு' (பத்து-திருமுரு. 1) என்றவழி, ஆசிரியத்துட் பிறதளை வந்ததென்று இலக்கணம் கூறி வழுவமைக்கல் வேண்டா, என்னை ? அது பெருவரவிற் றாகலின்; அதனான்வருஞ்சீர் வகையான் வந்ததென்று ஒழிதலே அமையும்,4 வரையறை இல்லனவற்றுக்கு வரையறை கூறல் குற்றமாகலி னென்பது. மற்று இவ்வுரியசைச் சீரிரண்டும் வரையாது கூறினமையின் மூன்றுபாவிற்குஞ் செல்லும் பிற வெனின்: "கலித்தளை யடிவயி னேரிற் றியற்சீர், நிலைக்குரித் தன்று” (தொல்-செய். 25) 1 . உரியசை யாகிய இவை சீர்வகையால் அசைச்சீர் என வேறாய் நிற்ற இது R1-11 தளைவகைசிதையாத்தன்மை நோக்கியே இயற்சீர்ப்பாற்படுத்து இயற்றுக என்பார், தளைவகை சிதையாத் தன்மை யான' என்றார். 3. - - - - - ru-4 நேர்பு, திரைபு என்னும் உரியசையிரண்டும் சீர்வகையான் வேறுவேறு எண்ணித் தொகைபெற்றுத் தமக்குச் சொல்லிய அடியுறழ்வன. தளைவகை - - - - - - - - - - . :§ شد، و.. ئه میم». நோக்குங்கால் இயற்சிசென்வே அடங்குவன. கட்டளையடிக்கண்ணதே இவ்வரை4: ைமு:ாகும். உரியசைச்சீர் ஆசிரியத்தும்பெருவாவிற்றாதலின் ஆசிரியத்துட் பிற த ைவந்தது என்று கூறி வழுவ மைக்க வேண்டுவதில்லை. 4. அதன: வருஞ் சீர்வகையான் வந்ததென்று ஒழிதலேயமையும் என இயைந்து வ சித்தல் பொருத்தமாகும்.