பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உள எருக எனக்கூறி, ஈண்டு இவற்றை இயற்சீர்ப்பாற்படு மென்றமையின் இவையுங் கலிப்பாவிற்கு விலக்குண்டனவென்பது. எனவே, ஆசிரியத்திற்கும் வெண்பாவிற்கும் உரியசைச் சிரிரண்டும் உரிய வாயின. ஆசிரியத்திற்கு மேற்கூறிய (25) சீர் பன்னிரண்டும் இவையிரண்டுமென அடியுறழுஞ்சீர் பதினான்காயின வெண்பா விற்கு முன்ன ரெய்தியசீர் பதினான்கும் இவையிரண்டுமாக அடியுறழுஞ்சீர் பதினாறாயின. கலிப்பாவிற்கு மேற்கூறியசீர் பதினான்குமேயாயின. இங்ங்னம் வகுக்கப்பட்ட சீர் நாற்பத்து நான்கினையும், சீர்வகையான் உண்மை நோக்கித் தொகுப்ப இயற்சீர்பத்தும் ஆசிரியவுரிச்சீரிரண்டும் வெண்சீர் நான்கும் அசைச் சீரிரண்டுமெனப் பதினெட்டாம். மேல் (50) ஐவகை அடியெனப்பட்ட அறுநூற்றிருபத்தைந் தடியும் இச்சீர் பதினெட்டானுந் தோற்றிக்கொள்ளப்படும். இப் பதினெட்டுச் சீரும் இரு நிலைமை யெய்துவனவும் எய்தாதனவு மாகி முப்பத்தொன்றாகி விரியுமாறு முன்னர், “எழுத்தள வெஞ்சினும்" (தொல்-செய், 43) என்புழிச் சொல்லுதும், (உஆர்) நச்சினார் க்தி னியம் : இஃது எய்தியது ஒருமருங்கு மறுத்தது; இயலசையிரண்டுஞ் சீர் நிலையெய்தியுந் தளைபடா என்றலின். உரியசை தட்கும் என்றவின், எய்தாதது எய்துவித்துTஉமாம்.: (இ-ஸ்.) இயற் ... படுத்து எ-து முன்னர்க் கூறிய உரியசை யிரண்டும் இயற்சீர்க்கண்ணே கூறுபடுத்து. தளைவகை ... யான எ-து அவ்வியற் சீர்க்குக் கூறுந்தளைவகை கெடாத தன்மைக் கண்ணே; இயற்றினர் கொளல் எ-து அவற்றையும் இயற்றிக் கொள்க. எ-று. நேரீற்றியற்சீர் அதிகாரத்தால் தேமா புளிமாப்போலத் தட்டல் கொள்க. தளைவகை சிதையா என்றது எய்தியுந் தளையா என்று கொள்க. "முலைவிலங்கிற் றென்று முனிவாள்' 'நெய்த்தோர் நிறைத்துக் கணம்புகல்’ என இரண்டசைச்சீரும் இயற்சீர் வெண்டளையாகத் தட்டன. 1. இச்சூத்திரத்தின் கருத்துரையும் பொருள் விளக்கமும் பேராசிரியருரை யைத் தழுவியமைந்தன.