பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் 'தளை வகை சிதையாத்தன்மையான என இடம் நியமித்தது, சீர் வகையான் அசை சீரெனவேறு நின்று அடியுறழ்ந்து எழுபது எனப்பட்ட தளைவகை நோக்குங்கால் வேறெண்ணுந் தொகைபெறாது இயற்சீர்க்கண் அட்ங்கும் என்றற்கு: எனவே, கட்டளையடிக்கே இவ்வரையறை : அல்லுழி வரையறையின்மையிற் றளை கொள்ளப்படாதென்றுணர்க. இக்காலத்தார் சீர் வகையடிக்குந் தளை கொள்வர். 'இடைமண்டிச் செல்வதனைக் கண்டு பெடைஞெண்டு” என்றவழிக் கண்டு என்பதனை இயற்சீர் வெண்டளை யென்பர். இனிக் 'கலித்தளை யடிவயின்' (செய்-உரு) என்றதன்பின் இச்சூத்திரங் கூறுதலின், இவையுங் கலிக்கு விலக்குண்டு ஆசிரியத்திற்கும் வெண்பாவிற்கும் உரியவாயின; எனவே, ஆசிரியத்திற்கு இயலசை மயங்கிய இயற்சீர் நான்கும் உரியசை மயங்கிய இயற்சீர் ஆறும் ஆக இயற்சீர் பத்தும், முன்னிரை யீற்ற ஆசிரியவுரிச்சீரிரண்டும் ஈண்டுக் கூறிய அசைச் சீரிரண்டும் ஆகப் பதினான்கும் அடியுறழுமாயிற்று. வெண்பா விற்கு இருவகை இயற்சீர்பத்தும் வெண்சீர் நான்கும் அசைச்சீர் இரண்டும் எனப் பதினாறு சீரும் அடியுறழுமாயிற்று. கலிக்கு நேரீற்றியற்சீர் ஒழிந்த இயற்சீர் எட்டும் வெண்சீர் நான்கும் ஆசிரியவுரிச்சீர் இரண்டும் எனப் பதினான்கும் அடியுறழுமாயிற்று. இனி நாற்பத்து நான்கும் உண்மைவகையால் இயற்சீர்பத்தும் ஆசிரியவுரிச்சீர் இரண்டும் வெண்சீர் நான்கும் அசைச்சீர் இரண் டும் எனப் பதினெட்டாயிற்று. இவற்றுள் இருநிலைமைப் படுவனபட்டு முப்பத்தொன்றாமாறு சீர்நிலைதானே (செய்-சக) என்னுஞ் சூத்திரத்துட் கூறுதும். ஆய்வுரை : இஃது, ஒரசைச்சீர் தளை கொள்ளுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) தளைவகை சிதையாத் தன்மை வேண்டுமிடத்து ஓரசைச்சீரை இயற்சீரே போலக் கொள்க. எ-று. நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் அசை நான்கினுள் முன்னர்க் குறித்த இயலசையிரண்டும் சீர்நிலையெய்தியும் தளை படா என்றலின் இச்சூத்திரம் எய்தியது ஒருமருங்கு மறுத்தது