பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஅ விருரு இனி, வெண்சீரென்பது அஃறிணை யியற்பெயராகலானும் பன்மைவினைகொண்டு பால் அறிய வந்ததன்றாயினும் அதனை, 'யானைக்கோடு என்றாற்போல இறுதி யென்றமையானும் பன் மைப் பாற்பட உணர்க. என்னை ? பின்னோன் முன்னோன் என்றவழி, அவர்க்கு முன்னும் பின்னும் வேறு சிலருளரென்பது உணர்த்துமாகலின் என்றார்க்கு, வெண்சீரிறுதி நீடுகொடி குளிறுபுலி வந்தவழி அவற்று முன்னின்ற நேர்பசை நிரைபசை களைக் கலிப்பாவினுள் கலித்தளையாக்குதற்கு நிரையசை யியற்று என்றா னென்னாமோவெனின், அற்றன்று; வெண் சீர்களின் இறுதியெனவே மூன்றாஞ்சீரும் நான்காஞ்சீரும் வெண் சீராகல் கூறி நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்டல் (372) எனவே, இரண்டாஞ்சீரும் வெண்சீர் வரல்வேண்டுமெனக் கூறி, நிரை தட்குமெனவே, இயற்சீரானும் ஆசிரியவுரிச்சீரானும் நிரையீறாயினவெல்லாம் முதற்கண் நிற்குமெனவுங் கூறினான்; கூறவே, ஆசிரியவுரிச்சீர் இடைநில்லாவெனவும் அங்ங்னம் நிற் பிற் கலியோசையழியு மென்பதுTஉமாம் இவர் கருத்தென்பது. அல்லதுாஉம் வெண்சீர்க்கு உரியசை யின்மையானும் அற்றன் றென்பது.? எனவே, ஈற்றுச்சீர் நிரைமுத லியற்சீர் வரினும் ஆண்டுத் துள்ளலோசை ஒடுங்குமென்பதாம். 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி. 11) 1. பின்னோன் முன்னோன் என இடஞ்சுட்டிக்கூறிய நிலையில் அவர்க்கு முன்னும் பின்னும் வேறுசிலர் உளர் என்பது புலனாதல்போன்று வெண்சீருள் ஈற்றின் கண் உள்ளது. எனவே அதன்முன்னும் வெண்சீருள என்பது பெறப்படுதலான் பன்மைப் பாற்பட உணர்க என்றார். 2. வெண்சீரிறுதி நீடுகொடி, குளிறு புலி என ஆசிரியவுரிச்சீர் வந்தவிடத்து அவற்றின் முதற்கணுள்ள நேர்பு, நிரைபு என்னும் அசைகளை நிரையசையே போலக்கொண்டு கலிப்பாவிலுள் கலித்தளை யாக்குதற்கு வெண்சீர் இறுதி நிரையசையியற்றே" என்றார் எனக் கூறுதல் கூடாதோ என வினவினார்க்கு, 'அவ்வாறு கூறுதல் கூடாது; காரண மென்னவென்றால் வெண்சீர்களின் இறுதியெனவே மூன்றாஞ்சீரும் நான்காஞ்சீரும் வெண் சீராதல் கூறி நிரைமுதல் வெண் சீர் வந்து நிரை தட்டல் (செய். 60) எனவே இரண்டாஞ் சீரும்வெண்சீர் வருதல் வேண்டும் எனக்கூறி அவை நிரையாய் நின்று தளைக்கும் எனவே இயற்சீராயினும் ஆசிரியவுரிச்சீராயினும் நிரையீறாயினவெல்லாம் முதற்கண் நிற்கும் எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறவே, ஆசிரியவுரிச்சீர் கவியடியின் இடைநில்லா என்பதும் அவ்வாறு நிற்பின் கவியோசையழியும் என்பதும் அவர் கருத்தாதல் புலனாம். அன்றியும் வெண்சீர்க்கு உரியசையின்மையும் இங்கு உணரத்தகுவதாகும். அன்றியும் கலியடியின் ஈற்றுச்சீர் நிரைமுத லியற்சீர் வரினும் அவ்விடத்துத் துள்ளலோசை குன்றும் என்க.