பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருசு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என்பது, வெண்சீரிறுதி நிரையொடுதட்ட கலித்தளை! 'அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையான்’ (கலி. 11) என்பது, வெண்சீர்கள் பகைத்துவந்து ஈற்றுச்சீரின் முதற்க னின்ற நேரசை நிரையசைபோலக் கலியோசை கொண்டமை யின் அது கலித்தளையெனப்பட்டது 2 இனி, வெண்சீர் நான்கும் ஒன்றிவரினுங் கலித்தளையாகுமேனும், அது வெண்பாவடியென வும்பட்டுத் திரிவுபடுதலின் அதனைக் கட்டளையடியென்னாது இறுதிக்கண் ஒரோவழி ஒருசீர் ஒன்றிவரினும் அதன் முதற்கட் பல வெண்சீர் வந்து பகைத்தலிற் கலியோசையே காட்டுமென் றானென்பது. அஃதேற் 'பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள்' (கலி-கடவுள் வாழ்த்து.) என்றவழி, இடைநின்ற சீரின் நேரசை நிரையசையியற் றென் னாமோவெனின், அது கட்டளையடியென்பது, "அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி’ (தொல்-செய், 11) என்பதனான் அறியப்படும். அல்லாதாரும் அவை செவிகருவியாக உணர்தற் கருமைநோக்கி அடியறியுந்தன்மை அரிதென்று சொல்லுப.4 இனி, இயற்சீரானன்றித் தளைகொள்ளாமோ வென்பார், 1. அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் என் புழி நிரைமுதலியற் சீர் ஈற்றுச் சீராய் வந்து வெண்சீரிறுதி நிரையொடு தட்ட கலித்தளையாயினும் அங்குத் துள்ளலோசையொடுங்குதலாற் சிறவாதாயிற்று என்பதாம். 2. இத்தொடரே இந்நூற்பாவுக்குரிய எடுத்துக்காட்டும் விளக்கமுமாகும். 夺 3. வெண்சீர் நான்கும் நேர்முதலாய் ஒன்றிவரினும் கலித்தளையாகுமெனிலும் அது வெண்பாவடியெனவும் கொள்ளப்படுதலின் அதனைக் கட்டளையடி பென்னாது இறுதிக்கண் வெண்சீர் ஒரோவழி நேர்முதலாய் ஒன்றிவரினும் அதன்முதற்கண் பல வெண்சீர் நின்று நிரைமுதலாய் முரணிவருதலின் கலியோசையே காட்டும் என்பார் வெண்சீரீற்றசை நிரையசை யியற்றே யென்றார் ஆசிரியர். 4. பண்டரங்கம் ஆடுங்காற் பணையெழி லனைமென்றோள் எனவரும் கலியடியில் ஆடுங்கால்' எனவரும் இரண்டாஞ்சீர் நிரைமுதலாகவாராது நேர்முதல்வெண்சீராய் ஒன்றி வந்ததாயினும் அசையுஞ்சீரும் இசையொடு புணர்ந்து வகுத் துணர்த்துங்கால் கலியோசையின் மாறுபடாது வந்தமை செவிகருவியாக உணரப்படுதலின் பதினான்கெழுத்துக்களால் இயன்று வந்த அவ்வடி கட்டளையடியாகும் என்பது பேராசிரியர் கருத்துப் போலும். அது கட்டளையன் றென்பது எனப் பாடம் இருந்திருக்குமோ என்பது ஆராய்தற்குரியதாகும்.