பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஅ எாருள "தன்சீ ருள் வழித் தளைவகை வேண்டா” (தொல்-செய். 55) என்பதனான், வெண்சீர்க்குத் தளைவிலக்கல்வேண்டி அவ்வெண் சீரினையும் இயற்சீராக இயற்றிக்கொள்ளப்படுமென்றற்கு ஒரு வெண்சீரின் ஈற்றசை திரையசையியற் றென்றானெனக் கூறி, ஞாயிறென்னும் இயற்சீரினை மாசெல்வாயெனப் பின்னுமொரு கால் திரித்ததனையே! திரியாமல் நிறுத்தி நிரைமுதல் வெண்சீர் வந்து நிரை தட்பினுங் கலியாமெனக் காட்டுப. அது ஞாயிறு புலிசெல்வாய் மாசெல்வாய் எனவரும். இவ்வாறே, 'கலித்தளை மருங்கிற் கடியவும் படா" (தொல்-செய் 24) என்று ஆசிரியவுரிச்சீர்க்குந் திரிபுகூறாரோவெனின், அது நினைந் திலர்போலுமென்று இகழ்ந்துரைப்பாராவர். மற்று, வெண் சீரிறுதி நிரைவந்தாற் கலித்தளை யாமென்பதற்கு ஒத்து வேறுண் டாயினன்றே நேரும் நிரையுந் தட்டதனை நேரும் நிரையும் பகைத்ததெனவும் வேண்டுவதெனவும் அங்ங்னம் பொருளுரைப் பார்க்கு எவ்வாற்றானும் இச்சூத்திரம் ஏலாதெனவுத், "தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும்' (தொல்-செய். 54) என்றவழித் தன்சீரானுந் தளைகோடுமாகலானும் அது பொருந்தாதென மறுக்க.2 இனி, வெண்சீரின் ஈற்றசை 1. திரிந்ததனையே. உ. வே. 2. தன்சீருள்வழித் தளைவகைவேண்டா' என்றவாறு வெண்சீர்க்கு வெண் சீர் வந்து ஒன்றுவது கட்டளையடியெனப்படாதா.கவின் வெண்சீர்க்குத் தளைவிலக்கல்வேண்டி அஃது இயற்சீராக இயற்றிக்கொள்ளப்படும் என்ற ற்கு ஒரு வெண்சீரின் ஈற்றசை திரையசையியற்றே" என்றார் எனவும், அம்முறைப்படி ஞாயிறு என்னும் இயற்சீரினை மா செல்வாய் எனப் பின்னும் ஒருகால் திரித்து அதனையே திரியாமல் நிறுத்தி, ஞாயிறு புலிசெல்வாய்' என நிரை முதல் வெண்சீர்வந்து நிரை தட்பினும் கலியாமெனக்காட்டுவர். இவ்வாறே நீடுகொடி குளிறுபுலி என்னும் ஆசிரியவுரிச்சீர்க்குந் திரிபுகூறலாமாயினும் ஆசிரியர் தினைந்திவர் போலும் எனக் குறை கூறுவாருமுளர். வெண்சீரிறுதி திரை வந்தாற்கலித்தளையாம் என்பதற்கு இந்நூலில் விதியிலிருந்தாலல்லவா நேர்மூன் நிரை வந்து தளைத்ததனை நேர்முன் நிரைவத்து ஒன்றாமை வந்ததெனக் கொள்ளல் வேண்டும். பிற்கால யாப்பிலக்கண வாசிரியர் கூறுமாறு 'காய்முன் திரைவரிற் கவித்தளையாமே என்பார்க்கு வெண் சீ ரீற்றசை திரையசை வியற்றே" எனவரும் இத்தொல்காப்பியச் சூத்திரம் இடந்தராது எனவும், "தன்சீர்வகையினுந் தளைநிலை வகையினும்’ (தொல். செய். 54) என்றவழித் தன்சீராலுந்தளைகொள்ளுமாதலால் நேர்முன் நிரையாக ஒன்றாது தளைத்தலே கலித்தளை யென்பார் கூற்றைப் பேராசிரியர் மறுத்தவாறு காண்க.