பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் “அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்” (பாலைக்கலி. கC) என்புழி வெண்சீரிறுதி நிரைமுதலியற் சீர் தட்டற்லிற்றுள்ளலோசை சிறவாதாயிற்று, பண்டரங்க மாடுங்காற் பணையெழி வணைமென்றோள்' போன்று. (கலித்தொகை-கடவுள் வாழ்த்து) ஆய்வுரை : இதுவும் தளை வழங்குந்திறம் உணர்த்துகின்றது. (இ - ள்.) வெண்சீர் ஈற்றசை நிரையசையின் இயல்பினது எறு. “வெண்சீர் ஈற்றசை தளை வழங்குமிடத்து இயற்சீரிறுதி நிரையசை போலும்’ என இதற்குப் பொருள் வரைந்து ‘இயற் சீர் என்பது அதிகாரத்தான் வந்தது” என்பர் இளம்பூரணர். மேல் கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ” (செய்-23) என்புழி அவ் ஆசிரியவுரிச்சீராற் கலித்தளையாம் எனக் கூறிய ஆசிரியர், கவிப்பாவிற்கு விலக்கப்பட்ட நேரீற்றியற்சீர் என்பதன் தொடர்பாக, வஞ்சி மருங்கினும் (செய்-25), இசைநிலை நிறைய (செய்-26), இயற்சீர்ப்பாற்படுத்து (செய்-27) என மூன்று சூத்திரத்தால் இடை புகுந்ததனைக் கூறிமுடித்து, முற் கூறிய கலித்தளையதிகாரம்பற்றி, வெண்சீரீற்றசை நிரையசை யியற்றே (செய்-28) எனவரும் இச்சூத்திரத்தாற் கூறுகின்றார் எனவும் வெண்சீர் பல தொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி அவ்வெண்சீருள் ஈற்றுநின்ற சீரின் முதல் வந்த நேரசை மற்றை நிரைமுதல் வெண்சீர் வந்து முன்னைய விரண்டும் கலித்தளையாமாறு போலக் கவித்தளையாம்' என்பதே இச்சூத்திரத்தின் பொருள் எனவும், மேல்நின்ற தளைவகை சிதையாத் தன்மைக் கண் என்பது மீண்டும் கூட்டியுரைக்கப்பட்டது எனவும், எனவே வெண்சீர்ப்பின்னர் நிரை வந்து தட்டலே சிறந்ததென்றும், நேர் வந்து தோன்றினும் அவ்வோசையே பயந்து ஒருநிகர்த்தா மென்றும் அவ்வாறாங்காலும் இறுதிச்சீரின் முதலசையே நிரை யியற்றாவதென்றும் ஆசிரியர் கூறினாரெனவும், கலிப்பாவிற்கு வெண்சீர் ஒன்றாது வருதல் உரிமையுடையதெனவே வெண்பா விற்கு ஒன்றிவரினல்லது ஒன்றாது வருதல் யாண்டுமில்லை யென்பது உடம்படப்பட்டதெனவும் இச்சூத்திரத்திற்கு விளக்கம் திரு பேர